For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க சட்டத்தை எதிர்த்து விக்கிபீடியா இணையத்தளம் 24 மணி நேரம் மூடல்

By Chakra
Google Oneindia Tamil News

wikipedia
வாஷிங்டன்: அமெரிக்க அரசு கொண்டு வரவுள்ள புதிய பைரசி சட்டத்தை எதிர்த்து வரும் நாளை 24 மணி நேரத்துக்கு விக்கிபிடியா இணையத்தளம் மூடப்படவுள்ளது.

அன்று மட்டும் இணையத்தளம் இயங்காது என்று விக்கிபீடியாவின் இணை நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் அறிவித்துள்ளார்.

நாள்தோறும் 2.5 கோடி பேர் இந்தத் தளத்தை பார்வையிடுவது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் ஆன்லைன் பைரசி சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டு வர அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவை இப்போது அந் நாட்டு செனட் சபை விவாதித்து வருகிறது.

திரைப்படங்கள், வீடியோ ஆல்பங்கள், வீடியோகேம்ஸ் ஆகியவற்றை இணையத்தளங்கள் வெளியிடுவதால் தங்களது வருமானம் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வருவதையடுத்து, இந்த சட்டத்தை அமெரிக்க அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இதற்கு கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், விக்கிபீடியா ஒருபடி மேலே போய் வேலைநிறுத்தம் போன்ற போராட்டத்தை அறிவித்துள்ளது.

விக்கிபீடியாவின் அறிவிப்பு

English summary
Wikipedia, the free online encyclopedia will shut down for 24 hours on Wednesday, Jan 18, said Wikipedia co-founder, Jimmy Wales on Monday. According to Wales, the step comes after Wikipedia decided to protest against the anti-piracy bill that is currently under debate in the US senate. SOPA has largely been an issue of debate in the US for the last few months, while Motion Picture Association of America say laws like SOPA, which has provisions like blocking websites at DNS level, is the dire need of the hour to fight piracy. And web giants like Google and Facebook are of the opinion that SOPA will choke innovation and affect freedom of speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X