For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்தமில்லாமல் இந்தியா வர சல்மான் ருஷ்டி திட்டம்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பிரபல ஆங்கில எழுத்தாளரான சல்மான் ருஷ்டியை இந்தியாவுக்குள் விடக் கூடாது என்று முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளதால் அவர் ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவுக்கு சத்தமில்லாமல் வந்து செல்லவிருக்கிறார்.

பிரபல பிரிட்டிஷ் இந்திய எழுத்தாளரான சல்மான ருஷ்டி வரும் 20 முதல் 24ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்நிலையில் முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத ருஷ்டியின் விசாவை ரத்து செய்யுமாறு இஸ்லாமிய மத அமைப்பான தாரூல் உலூம் தியோபான்ட் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் அனுப்பியது.

ஆனால் மத்திய அரசு இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அறிவித்தவாறு ருஷ்டி இலக்கிய விழாவில் கலந்து கொள்வார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர் வருவதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து தெரிவித்துள்ளார்.

மேலும் ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவதை அம்மாநில மக்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த சந்திப்புக்கு பிறகு கெஹ்லாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருகிறாரா, இல்லையா என்ற அதிகாரப்பூர்வமான தகவல்கள் என்னிடம் இல்லை. ஆனால் அவர் வருவதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. இலக்கிய விழா ஏற்பாட்டாளர்களுடன் எனது தலைமைச் செயலாளர் தொடர்பில் உள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை எந்த மாநில அரசும் விரும்பாது. எனவே, இது குறித்து மத்திய அரசிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.

இந்நிலையில் சல்மான் ருஷ்டி இலக்கிய விழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் பிற நிகழ்ச்சிகளில் மட்டும் சத்தமில்லாமல் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று கூறப்படுகின்றது.

English summary
Author Salman Rushdie may attend the Jaipur literary festival silently as muslim groups and Rajasthan people are against his visit. Rajasthan CM Ashok Gehlot has informed home minister P. Chidambaram that the locals are against the author's visit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X