இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழகத்திலும் கொண்டாட ஏற்பாடு!

வியாழக்கிழமை, ஜனவரி 19, 2012, 14:10 [IST]
கொழும்பு: தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவு, இதுவரை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தைத் தாண்டி தமிழகத்தில் எங்குமே கொண்டாடப்படாத இலங்கையின் சுதந்திர தின விழாவை, முதல் முறையாக சென்னையில் நடத்த சில புத்த பிக்குகள் ஏற்பாடு செய்து வருகின்றனராம்.

சென்னையில் உள்ள மகா போதி சபையுடன் இணைந்து இந்த சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இலங்கை துணைத் தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் 64வது சுதந்திர தினம் பிப்ரவரி 4ம் தேதி வருகிறது. இதை இலங்கையில் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். அதேபோல தமிழகத்திலும் இதைக் கொண்டாட முடிவு செய்துள்ளனராம்.

இதுவரை தமிழகத்தில் இலங்கை துணைத் தூதரகத்தைத் தாண்டி வெளியில் இலங்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதில்லை. அங்கேயும் கூட மிகவும் எளிமையான முறையில்தான் சத்தம் போடாமல் கொண்டாடுவது வழக்கம். காரணம், விடுதலைப் புலிகள் குறித்த பயம். ஆனால் இதை தற்போது தமிழகத்திலும் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனராம். சிங்கள புத்த பிக்குகள் நிறைந்துள்ள மகா போதி சபையுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளில் இலங்கை துணைத் தூதரகம் இறங்கியுள்ளதாம்.

இந்த கொண்டாட்டத்தில், இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. புத்த பிக்குகள், இந்தியாவில் வசித்து வரும் இலங்கையர்கள் திரளாக கலந்து கொள்ளப் போகிறார்களாம்.
Posted by:
English summary
Sri Lankan consulate in Chennai is planning Lanka's independance day celebration in the city. SL's 64th independance day is celebrated on Feb 4 in the island nation.
User Comments
ratha bharath 24 Jan 2012 03:00 pm
பிப்ரவரி 4 தமிழ்நாட்டின் கருப்பு தினம்.
ratha bharath 24 Jan 2012 03:03 pm
எங்கள் ஒரே தமிழ் தலைவர் பிரபாகரன்
ratha bharath 24 Jan 2012 02:52 pm
இலங்கையின் சுதந்திரம் தினவிழா சென்னையில் நடந்தால் ஈழத்தின் சுதந்திரம் தினவிழா இலங்கையில் நடக்க வேண்டும்.வெறி பிடித்த சிங்களவன் புத்த பிக்குகள் சொன்னால் கேட்பான அப்படியானால் நிறுத்த சொல் மீனவன் தாக்குதலை! இவள்:"பிரபாகரனின் தமிழச்சி"
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs