To check Oneindia Tamil on your Mobile
go to:   http://m.oneindia.in/tamil/

சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு கடத்த இருந்த 5 சாமி சிலைகள் மீட்பு: ஒருவர் கைது

சென்னை: சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு 5 சாமி சிலைகளை கடத்த முயன்ற நபர், விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கினார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து செல்லும் விமானம் நேற்று இரவு புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் சாமி சிலைகள் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தராஜுலு(35) என்பவர் பெரிய அட்டைப் பெட்டிகளுடன் விமான நிலையத்திற்கு வந்தார். அவரிடம் விசாரித்த போது, தான் பேங்காக் செல்வதாகவும், தனக்கு தேவையான பொருட்கள் அட்டைப் பெட்டியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அவர் மீது சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வுத் துறையினர் அட்டைப் பெட்டியை திறந்து பார்த்தனர். அதற்குள் இருந்த இன்னொரு அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த 5 சாமி சிலைகளை பறிமுதல் செய்தனர். சிலைகளின் மதிப்புகளை அறிய தொல்லியல் துறையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

விசாரணையில், சிலைகளை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததாகவும், பேங்காக்கில் உள்ள தனது நண்பர்களுக்காக சிலைகளை எடுத்துச் செல்வதாகவும் கோவிந்தராஜுலு தெரிவித்தார். இது குறித்து அவரிடம் மேலும் விசாரமை நடந்து கொண்டிருக்கிறது.
English summary
Police have arrested a Andhra based man Govindarajulu(35) in Chennai airport when he tried to smuggle 5 idols to Bangok in Thailand. All the 5 idols have been confiscated and investigation is going on.
ஜனவரி 20, 2012 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
    Upcoming Matches
Aus Vs Sl at Bellerive Oval Fri 24th Feb ODI
Ken Vs Ire Fri 24th Feb Int2020
Nz Vs Sa - 1st ODI at Westpac Stadium Sat 25th Feb ODI

செயற்கை மார்பகத்திற்குள் 2.5 கிலோ கொகைனை புதைத்து எடுத்து வந்த மாடல் அழகி

ரோம்: பிரேசிலிலிருந்து ரோம் நகருக்கு வந்த விமானத்தில் பயணித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 33 வயது மாடல் அழகி, தனது மார்பகத்திற்குள் 2.5 கிலோ கொகைன் போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அந்த போதைப் பொருளைப் பறிமுதல் செய்து அழகியையும் கைது செய்தனர்.அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. எம்எப்எம் என்று மட்டும் அடையாளம் கூறப்பட்ட அப்பெண் பிரேசிலின் சாவோ பாலோ நகரிலிருந்து விமானம் ஏறியுள்ளார். ரோம் நகரின் லியானார்டோ டாவின்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது அவரைப் பார்த்த அதிகாரிகள்.....

ரூ.60 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல்: ஐயப்ப பக்தர் உட்பட 4 பேர் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை 2 மோட்டார் சைக்கிள்களில் வைத்து கடத்த முயன்ற ஐயப்ப பக்தர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை எழும்பூரை அடுத்த எத்திராஜ் சாலை வழியாக 4 வாலிபர்கள் சேர்ந்து போதைப் பொருள் கடத்துவதாக உளவுப் பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.இது குறித்த தகவல் அறிந்த இணை கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் சரவணன் உள்ளிட்டோரின் மேற்பார்வையிலான போலீஸ் படை எத்திராஜ் சாலையில்.....
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
Oneindia  Oneindia Login