டெல்லி: கதிர்வீச்சு அளவு குறிப்பிட்டப்பட்டே இனி செல்போன்களை விற்க வேண்டும் என டெல்லி மாநில அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க திட்டமிட்டுள்ளது.
செல்போன் பயன்படுத்தும் போது உடல்ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு, புற்றுநோயை உண்டாக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டது.
இந்த நிலையில், டெல்லியில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும், அவை வெளிப்படுத்தும் கதிர்வீச்சு அளவை குறிப்பிட வேண்டும் என்று மாநில அரசு அறிவிப்பு வெளியிட உள்ளது. இதன்படி மொபைல்போன் விற்கப்படும் பெட்டியின் மீது அச்சடித்தோ, அல்லது தனியாக அட்டையில் இணைத்தோ, இதை தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மொபைல்போன் நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய டெல்லி மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் வாலியா, ஏற்கனவே மின்னணுக் கருவிகள் வெளியிடும் கதிர்வீச்சு தொடர்பாக விதிகளை உருவாக்க மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறினார். எனவே மொபைல் போன் கதிர்வீச்சு அளவை தெரிவிப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறையிடம் பேசி, இதற்குரிய தனி விதிகளை சில வாரங்களில் கொண்டு வரப்போவதாகவும் வாலியா கூறியுள்ளார்.