For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இணையதள தகவல்களுக்கு தணிக்கை இல்லை: மத்திய அரசு முடிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Net
டெல்லி : இணையதள தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. இணையதள தகவல்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என்ற கருத்து மீதான விவாதங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அரசு இந்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சமயங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் தகவல்களை வெளியிட்டதாக கூறி கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள் மீது, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்திருந்த்து. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விரும்பத்தகாத தகவல்களைத் தரும் இணையதள நிறுவனங்கள் சீனாவை போல இங்கும் தடைசெய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

தணிக்கை கிடையாது

இந்த நிலையில் இணைய தளத்தில் வெளியாகும் தகவல்களை தணிக்கை செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்திரசேகர் கூறியுள்ளார். ஒவ்வொரு நிறுவனமும் அந்தந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கினாலே போதுமானது. எனினும், சட்டதிட்டங்களை பின்பற்றுவதை உறுதிப்படுத்த சில நடைமுறைகளை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
The government Thursday said it has no plans to censor the Internet even as it sought to send a strong message to social websites like Google and Facebook that any company wishing to operate in the country will have to follow law of the land.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X