இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ தயார்- கொழும்பில் கலாம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 22, 2012, 10:39 [IST]
 Ready Help Develop Rural Sri Lanka Kalam Aid0091
கொழும்பு: இலங்கையின் கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்களில் உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன். பல்வேறு இன மக்கள் வசிக்கும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வேற்றுமைக்கு மக்கள் இடம் கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

விடுதலைப் புலிகளுடனான போரை மிகக் கொடூரமாக முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்து தமிழர் பகுதிகளை சுடுகாடாக்கி, தமிழர்களை பிச்சைக்காரர்களாக மாற்றிய பின்னர், எழுந்துள்ள மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச்சாட்டுக்ளிலிருந்து மீள பல்வேறு அறிவிப்புளையும், நடவடிக்கைகளையும் எடுத்து சர்வதேச சமுதாயத்தின் கண்களில் தான் நல்லவன் என்பதை வெளிக்காட்ட பல்வேறு பாவ்லாக்களை செய்து வருகிறார் ராஜபக்சே.

அதில் ஒன்றுதான் 2012ம் ஆண்டை மும்மொழி கல்வித் திட்ட ஆண்டு என்று அவர் அறிவித்தது. இத்திட்டத்தின்படி இந்த ஆண்டு முதல் இலங்கையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழில் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாம். இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவுக்கு அப்துல் கலாமை ராஜபக்சே அரசு வரவழைத்துள்ளது.

இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் கலாம் இலங்கை சென்றார். அங்கு கொழும்பில் நடந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ராஜபக்சே உள்ளிட்ட இலங்கை அரசைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியின்போது பேசிய கலாம், இலங்கையின் கிராமப்புற மக்கள் பயன்பெறும் இத்திட்டங்களை செயல்படுத்த உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்.

சகிப்புத்தன்மையும், கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையும் சிறப்பான சமூகத்தை உருவாக்கும். பல்வேறு இன மக்கள் வசிக்கும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வேற்றுமைக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்றார்.

முன்னதாக செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த கலாம் கூறுகையில், இலங்கையில் அமைதியை உருவாக்குவதே எனது பயணத்தின் நோக்கம். சுபிட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்க இருக்கின்றேன்.

இணக்கம் மற்றும் செழிப்பு கொண்ட அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப இரு தரப்புத் தலைவர்களையும் நான் சந்திக்க இருக்கிறேன்.

எனது பயணம் அமைதியை ஊக்குவிப்பதற்கானது. சிலர் விமர்சித்தாலும் அது அவர்களின் ஜனநாயக உரிமை. குறிப்பிட்ட எந்தப் பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காணமுடியாது. மோதல்களுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை என்று கூறியிருந்தார்.

நான்கு நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறார் கலாம். அதில் முக்கியமாக யாழ்ப்பாணத்திற்கு நாளை செல்லவுள்ளார்.
Posted by:
English summary
Former president A P J Abdul Kalam has said he is ready to develop rural parts of Sri Lanka. He launched Rajapakse's trilingual initiative on saturday in Colombo.
User Comments
ambalavanan 23 Jan 2012 07:58 am
வேற்றுமையில் ஒற்றுமை எப்போது வரும் ? உரிமையிலும் ஒற்றுமை இருக்கும் போதுதான் . சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம். அவன் அடிச்சாலும் , கொன்னாலும் பராவாயில்லை , தமிழனிடம் சகிப்புத்தன்மை உள்ளது. எதையும் தாங்குவான். அவன் ரொம்ப நல்லவன். கலாம் அவர்களே , இயல்பான , பாமர அறிவு , பாமர அறிவு வேண்டும்.
Thenaali Raman 23 Jan 2012 06:05 am
கலாம் சொல்லியது உண்மையே இருபினும் சொல்லிய நபர்தான் தவறானவர் இதனைத்தான் சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்வர்.அங்கெ இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் யார்??அப்படி இப்பொழுது அங்கு யாருமே இல்லை இவர்கள் இதனை எதிர்ப்பதன் காரணமே இரு இனங்களும் ஒன்றாகி விடுமோ எனும் பயம் காரணம் இவர்கள் தமிழின் பெயரிலேயே வயிறு வளர்க்கும் நச்சுப் பாம்புகள்.
Thenaali Raman 23 Jan 2012 06:08 am
இரு இனங்களும் ஒன்றாக வாழ வேண்டும் எனும் ஒரு சிறிய விடயத்தை இவர் சொல்லித்தான் நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமா என்ன?நம் மக்கள் என்ன காதில் வாழும் காட்டுவாசிகள் என்றா நினைகிறீர்கள்?இரு இனங்களையும் பிரித்ததும் இன்றும் ஒன்று சேர விடாது தடுத்து நந்தி போல் குறுக்கே நின்று கொண்டு இருப்பதும் இந்தியாவும் அதன் கூலிகளும் என்பது கூடத் தெரியாமலா இவர் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார்?
Thenaali Raman 23 Jan 2012 06:13 am
இந்தியா இலங்கை விடயங்களில் மூக்கை இனியாவது நுளைகாமலே இருந்தால் போதும் அங்கு அமைதி திரும்பி விடும்.அதனை விடுத்தது அடுத்தவன் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து (அழையா விருந்தாளியாக )குழப்பத்தை உண்டுபண்ணுவதும் ஒன்றுமே செய்யாமல் மேடைகளிலும் பத்திரிகைகளிலும் பொய்யாக செய்திகளைக் கொடுப்பதும் நல்ல ஒரு மனிதனுக்கு உரிய பண்பு அல்ல.வெறும் இருபது வீடுகளிக் கட்டி விட்டு அதுவும் உடைந்து விழும் நிலையில் உள்ளது ஆயிரம் வீடுகள் என்று கதை விடுவதும்....
Thenaali Raman 23 Jan 2012 06:16 am
துவிச்சக்கர படத்தில் காட்டி பதினைந்தாயிரம் கொடுத்தேன் என பீலா விடுவதும் பாடசாலைகளே இல்லாத இடத்தில இருநூறு பாடசாலைகளைத் திருத்தி அமைத்தேன் என புலம்பெயர் இந்தியக் கூலிகள் மூலம் பிரச்சாரம் செய்வதும் நாகரீகமான ஒரு நாடோ மனிதனோ செய்யும் செயல் அல்ல. அடுத்தவனுக்கு சொல்லும் முன் உன் முதுகையும் கொஞ்சம் திருபிப் பார் முதுகென்ன உனது உடல் முழுவதுமே இருபது சேறுதான்.
kulanthaivel 25 Jan 2012 09:00 pm
ராஜபக்க்ஷவை தமிழ் மக்களால் மன்னிக்க முடியாது
mano 23 Jan 2012 05:12 am
முதலில் அவர் காணும் வல்லரசுக் கனவு பலிக்கட்டும் அப்புறமா மகிந்தவோடு சிங்களத்தில் பேசி தமிழரின் கதையை முடிக்கட்டும்.
kandaiah 23 Jan 2012 01:00 am
யாழ்பல்கலைக்கழக மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் ஜனாதிபதியும் , பிரபல விஞ்ஞானியுமான அப்துல் கலாம் யாழ் மண்ணில் வைத்து இந்திய அமைதிப்படை காலத்தில் அவர்கள் செய்த படுகொலைகள் பாலியல் வன்புணர்வுகள் எல்லாவற்றிக்கும் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க போவதாக அறியவருகுயறது
Selvaraju Raju 22 Jan 2012 07:29 pm
களம் அப்படியே இஸ்ரேலுக்கும் போயிடு வரும் ,
milton kumar 22 Jan 2012 05:02 pm
கலாமுக்கு எதிராக கருத்து கூறியிருக்கும் அத்தனை பேரும் புலம் பெயர்த்து சொகுசாக வாழும் அனாதை ஈழ தமிழர்கள்.இவர்களுக்கு ஈழத்தில் உள்ள தமிழர்களை பற்றி சிறிதும் கவலை கிடையாது.அவர்கள் எப்படி கஷ்டப்பட்டாலும், செத்தொழிந்தாலும்,அந்த பிரச்னை மட்டும் சாககூடாது என்று நினைப்பவர்கள்.அந்த பிரச்சனையை சொல்லித்தான் அமெரிக்க கனடா, இங்கலாந்தில் பி ஆர் வாங்கியுள்ளார்கள்.அங்கே பிரச்னை இல்லை என்றால் இவர்களை வெள்ளைகாரர்கள் விரட்டி தனது சொகுசு வாழ்க்கை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தான் இப்படி கருத்துகூறுகிறார்கள்
milton kumar 22 Jan 2012 05:13 pm
அங்கு போராட கூட ஆள் இல்லை. இன்னும் இலங்கை அரசுக்கு எதிராக அந்த மக்களை திருப்பிவிட்டால் அந்த மக்களின் நிலை இன்னும் பரிதாபமாகிவிடும். இந்தியா போல் இலங்கையையும் தன மக்களை சிங்க தமிழன் என்று பேதமில்லாமல் சமமாக பாவித்து ஆட்சி செய்யும்படியும், தமிழர் பகுதிகளின் முன்னேற்றத்திற்காகவும் அந்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த பிரச்சனையை சொல்லி பி ஆர் வாங்கி சொகுசு வாழ்கையை தேடிக்கொண்ட இந்த அனாதை நாய்களை திரும்பவும் ஈழத்தின் உள்ளே விடக்கூடாது.
Selvam 22 Jan 2012 03:55 pm
கலாமிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை
Vaidhyanathan K 22 Jan 2012 02:57 pm
களம் ஒரு அப்பன் பெயார் தெரியாதவன் இதில் அவன் ஒரு முஸ்லிம் வேறு இவன் தமிழகத்துக்கு துரோகம் செய்தது போல் ஒரு நாள் இந்தியாவுக்கும் துரோகம் செய்து பாகிஸ்தானுக்கு ஓடி விடுவான் பிறகு . எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடகின்றதோ அது நன்றாகவே நடகின்றடது, எது நடக்க விருகிறதோ அது நனடரகவே நாடாகும் என்பான்
summa 22 Jan 2012 04:03 pm
ஐயா அப்துல் கலாம் அவர்களே நீங்களுமா இப்படி
ஆரஞ்சு தமிலன் டா 22 Jan 2012 02:19 pm
உன்னை நூடில்ஸ் தலையன் என்று சொல்வதில் தவறே இல்லை.
ஆரஞ்சு தமிலன் டா 22 Jan 2012 02:16 pm
இந்த கலாமின் சமீபத்திய நடவடிக்கைகள் மிகவும் மோசமாக உள்ளது. கூடாங்குலம் மக்களின் அழிவிற்கு துணை நிற்கிறார். "நெருங்கிய நண்பர்' ராஜபக்ஷேவை மாதம் ஒரு முறை எப்படியாவது சந்தித்து பிரியாணி விருந்து அருந்திவிட்டு திரும்புகிறார். இப்பொழுது இலங்கைக்கு பொருளாதார ஆதரவாம். உன்னை பொய் ஒரு முன்மாதிரியாக கொண்டுள்ளார்களே எமது தமிழ் இளைஞர்கள், அவர்களை சொல்லனும்.
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs