கொழும்பு: கொழும்பு சிறையில் நடந்த பயங்கர கலவரத்தில் 31 பேர் படுகாயமடைந்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள நியூ மேகசின் சிறைச்சாலையில் தரமற்ற உணவு குறித்து கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் மோதல் மூண்டது.
மேலும் புதிதாக கொண்டுவரப்பட்ட சிறை விதிமுறைகளை எதிர்த்தும் கைதிகள் கலவரத்தில் இறங்கியுள்ளனர்.
கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா தெரிவித்தார்.
கலவரத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். 26 கைதிகளுக்கும், 5 அதிகாரிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறைத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிறைவாசிகள் பெரும்பாலோருக்கு துப்பாக்கி சூட்டினால்தான் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையான காயம் முட்டிக்கு கீழேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.