For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா அன்ட் கோ தொடர்பு: நாகை ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் ராஜினாமா

Google Oneindia Tamil News

நாகை: நாகை அதிமுக ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழியாக இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து சசிகலா ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் பணியில் முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். சசிகலா ஆதரவு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும் சசிகலா ஆதரவு அமைச்சர்கள் விரைவில் மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக சசிகலாவின் தம்பி திவாகரனின் விசுவாசியாக இருந்ததற்காக மயிலாடுதுறை எம்.பி. மணியன் மற்றும் நாகை மாவட்ட ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரையும் கட்சிப் பதவிகளில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.

இதையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை ரவிச்சந்திரன் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை மாவட்ட கலெக்டர் முனுசாமியிடம் அவர் கொடுத்துள்ளார்.

English summary
President of Nagapattinam District Panchayat Council Ravichandran has resigned his post after ADMK chief cum Jayalalithaa has snatched his party post for being an ardent supporter of Sasikala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X