For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?-கலக்கத்தில் சசி ஆதரவு அமைச்சர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அமைச்சரவை எப்பொழுது மாற்றியமைக்கப்படும் என்று அதிமுக தொண்டர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை அடுத்தடுத்து முதலவர் ஜெயலலிதா மாற்றம் செய்து வருகின்றார்.

ஆனால் சசிகலா, ராணவன், திவாகர், மகாதேவன், எம்.நடராஜன், பவனிவேல், ராமசந்திரன் ஆகியோரது தீவிர விசுவாசிகளாக வலம் வந்த அமைச்சர்கள் மட்டும் ஏன் இன்னும் மாற்றப்படவில்லை என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் ஆளும்கட்சியினர் மனதில் எழுந்துள்ளது.

இது குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, வரும் 26ம் தேதி குடியரசு தினம் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதே போன்று வரும் 30ம் தேதி தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரு விவகாரங்களில் மட்டும் முதல்வர் ஜெயலலிதா தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. சசிகலாவுடன் தொடர்புடையவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் உளவுத்துறை மூலம் அலசி ஆராயந்து அது குறித்த அனைத்து தகவல்களும் தயாராகவே உள்ளதாம்.

எனவே, தமிழக அமைச்சர்கள் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்று கிசுகிசுக்கப்படுகின்றது. இந்த அதிரடி மாற்ற பட்டியலில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 11 முதல் 18 அமைச்சர்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. அவர்களின் பதவி பறிபோகலாம் அல்லது குறைந்த பட்சம் அவர்கள் வகிக்கும் துறைகளாவது மாற்றப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றமாக இது இருக்கலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

English summary
It is told that TN cabinet may get reshuffled soon. 11-18 ministers will either get sacked or their departments will be changed. Sasikala supporters are wondering about their future in the cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X