இலங்கையின் கிழக்கு மாகாணத்துக்கு கலாம் வராதது ஏமாற்றமளிப்பதாக புகார்

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 29, 2012, 13:41 [IST]
மட்டக்களப்பு: இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கிழக்கு மாகாணத்துக்கு வருகை தராதது பெரும் ஏமாற்றமளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கை சென்ற அப்துல் கலாம், தமிழர்கள் வாழும் மாகாணங்களில் ஒன்றான வடக்கு பிரதேசத்துக்கு மட்டும் சென்றிருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மன்சூர், கிழக்கு மாகாண பல்கலைக் கழக மாணவர்கள், பள்ளி மாணவர்கள் அனைவரும் அப்துல் கலாமின் வருகையை பெரிதும் எதிர்பார்த்திருந்தனர் என்றார்.

கிழக்கு மாகாணத்துக்கு கலாம் வருகை தர ஏற்பாடு செய்து தருமாரு இந்திய தூதரகத்திடம் கேட்டுக் கொண்ட நிலையில் தூதரகமும் நம்பிக்கை அளித்திருந்தது. எப்போதோ ஒருமுறை வருகை தரும் அப்துல்கலாமை கிழக்கு மாகாண மக்கள் சந்திக்காமல் போனது இளம்தலைமுறையை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது என்றும் மன்சூர் கூறியுள்ளார்.
Posted by:
English summary
Former Minister A. R. Mansoor told The Island that the people of the Eastern Province were saddened by the failure of the Indian HC to arrange a visit to the EP by former President Dr. A.PJ Abdul Kalam
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs