முல்லைப் பெரியாறு- நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த வேண்டாம் என எம்.ஜி.ஆர். சொன்னாரா?

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 29, 2012, 11:16 [IST]
 Mgr Never Told Reduce Mullaiperiyar Dam Level To 136ft Aid0091
சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தத் தேவையில்லை என்று முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சொன்னதாக கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரான அச்சுதானந்தன் கூறியிருப்பதற்கு எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சர்களாக இருந்த மூன்று முன்னாள் அமைச்சர்கள் மறுப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்த ராஜா முகமது, மின்சாரத்துறை அமைச்சராக இருந்த சாமிநாதன், கல்வித்துறை அமைச்சராக இருந்த அரங்கநாயகம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது நீர்பாசனத்துறை அமைச்சராக நான் (ராஜா முகமது) இருந்தேன். எம்.ஜி.ஆர். என்றுமே முல்லை பெரியாறு அணைக்கட்டு நீர்தேக்கத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த வேண்டியதில்லை என்று பேசியது இல்லை. மத்திய அரசுக்கு அச்சுதானந்தன் கூறுவது போல் கடிதம் எழுதியதுமில்லை.

1979-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய நீர்வள ஆணையத்தலைவர் கே.டி. தாமஸ் முல்லை பெரியாறு அணையை பார்வையிட்டு நீர் வடிக்கட்டிகள், ட்ரெய்னேஜ் காலரி வைக்கவும், வெள்ளம் வழிய 3 பெரிய கண் மதகுகள் கட்டவும் வலியுறுத்தினார். பாலம் பலவீனமானதாய் இருப்பதால் அல்ல, காலத்திற்கு ஏற்றப்படி டிசைன் செய்ய கூறினார்.

மேற்படி திருத்தப்பணிகள் செய்ய நீர் தேக்கத்தை 136 அடிக்கு குறைக்க வேண்டியிருந்தது. அதற்கு தான் எம்.ஜி.ஆர். சம்மதித்தார். நிரந்தரமாக நீர்தேக்கம் 136 அடியாக இருந்தால் போதுமென்று அவர் சொல்லவில்லை.

1980-ல் பணிகள் முடித்து மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரை சந்தித்தபோது கமிஷன் தலைவர் பழைய அணை புதிய அணை போல் ஆகி விட்டது. நிச்சயம் 145 அடி உயர்த்தலாம் என்று கூறினார். அது கமிஷன் மினிட்சில் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி கேரளாவில் ஆட்சியிலிருந்த போது, நீர் மட்டத்தை 145 அடியாக உயர்த்த வேண்டுமென்று போராட்டம் நடத்தியது தனது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்பதை அச்சுதானந்தனுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

தென் தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர் பிரச்சினை என்பதை மறந்து புது அணை கட்டலாம் என்பதும், இருக்கிற அணையின் சுவரை இடிப்பதும், தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் மத்திய பாதுகாப்பு அமைச்சர் என்ற தைரியத்தில் தமிழ்நாடு அரசுக்கு தெரியாமல் அணைப்பகுதியில் ராணுவ கப்பற்படையின் மூலம் ஆய்வு செய்வதும், கேரள அமைச்சர் ஒருவர் அணையை உடைப்போம் என்பதும் மிகவும் ஆத்திரமூட்டும் செயல்கள் மாத்திரமல்ல. உச்ச நீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் அடங்க மாட்டோம் என்று கேரளா சொல்வதற்கும் ஒப்பாகும். அரசியல் சட்ட விதிகளின் படி கேரளா அரசை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கும் கேரள அரசு 1980-லிருந்து 2005 வரை தமிழகத்திற்கு ரூ.3 ஆயிரத்து 250 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநில, மத்திய அரசு அனுமதியில்லாமல் முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவை குறைக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்ட 4 துணை அணைகளை கேரளா அரசு அகற்ற வேண்டும். 152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையை விட 555 அடி உயரமுள்ள இடுக்கி அணையை தமிழ்மாநில, மத்திய அரசு சம்பந்தம் இல்லாமல் கட்டியதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மொழி வழி மாகாணம் பிரிக்கும் ஆணையமே தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க அப்போது பரிந்துரை செய்திருந்தது. ஆகவே, தேவிகுளம், பீர்மேட்டை தமிழகத்தோடு இணைக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைத்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதற்காக வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு சிறப்பு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தோடு பீர்மேடு, தேவிகுளம் பகுதியை இணைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Posted by:
English summary
Former Chief Minister MGR never told to reduce Mullaiperiyar dam level to 136 ft, permanently said former ADMK Ministers Aranganayagam, Swaminathan and Raja Mohammad. Thye slammed Kerala opposition leade Achuthananthan for spreading false clamis.
User Comments
Syed Ali 02 Feb 2012 01:57 pm
சந்துரு நண்பரே.உங்களின் எம்ஜியார் விசுவாசம் வியப்பாக இருக்கிறது.எம்ஜிஆர் ஒரு அற்ப்புதமா?இல்லை தீர்க்கதரிசியா?அவரது இந்த செயலால் இன்று நாம் கேரளாவிடம் கையேந்தி அல்லல்படுகிரோமே?இதைத்தானே அவர் தீர்க்கதரிசனம் செய்தார்.ஆஹா என்ன அற்ப்புதம்.
Syed Ali 01 Feb 2012 11:53 pm
நண்பர் சந்துரு எம்ஜியாரை எதிர்ப்பவருக்கும் அவர்முகம் அற்புதமாக காட்சியளிக்கும் அதற்க்கு உங்களையே உதாரணம் காட்டி எம்ஜியார் மீது இருக்கும் உங்கள் பற்றை நினைத்து வியப்பாக இருக்கிறது.ஒரு கேள்வி காலத்திற்கு ஏற்ற மாதிரி நல்லா இருக்கக்கூடிய உங்கள் வீட்டை தற்காலிகமாக சாமான்களை காலிபண்ணி வீட்டை நவீனப்படுத்திய பிறகு சாமான்களை மீண்டும் வைத்துக்கொள்ளலாம் என்பது சரியென்றால் எம்ஜியார் ஒரு (அற்புதம்?) தான்
Chandru Krishna 31 Jan 2012 04:13 pm
தமிழன் மடையன் என்றால், மத்திய மாநில ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணியோடு போட்டியிட்ட வரலாறு காணாத ஊழல் அட்டுழியம் புரிந்த கருனாகநிதியை மீண்டும் CM ஆக்கியிருப்பான்! அல்லது சினிமா மோகத்துக்கு அடிமையாகி மப்பில் மிதக்கும் விஜயராஜை CM ஆக்கியிருப்பான்! பீர்மேடு தேவிகுளத்தை மலையாளிக்கு தாரை வார்த்த காமராசரை 1967 இல் மீண்டும் CM ஆக்கியிருப்பான்! அல்லது சாதியை நம்பி "படுத்த்கொண்டே ஜெயிப்பேன்" என்று சொன்னவரை அந்த சாதி அதிகம் உள்ள விருதுநகரில் MLA ஆக்கியிருப்பான்! சும்மா அதிர்து இல்லே?
Arivoli 30 Jan 2012 11:30 am
அணையின் உயரத்தினை குறைத்துக்கொள்ள அனுமதித்தது மா.கோ.ராமச்சந்திரன்தான். அந்த பேச்சுவார்த்தையில் தமிழகத்தின் பெயரில் பங்கேற்ற முப்பது ௩௦ உறுப்பினர்களில் ஒரே ஒரு தமிழர்தான் இருந்தார். பெரும்பாலும் மலையாள அதிகாரிகளே இருந்தனர். இதன் மூலன் மா.கோ.ரா தனது மலையாள இனப்பற்றை வெளிப்படுத்தியுள்ளார். தமிழன் மடையன் இன்னும் அவனை தெய்வமாய் வணங்குகின்றனர்.
Chandru Krishna 31 Jan 2012 04:11 pm
ம.கோ.ரா. என்று நீர் சொல்வதில் இருந்தே உன் உள்ளத்தில் இருந்து வெளிப்படுவது "பொறாமை வயிற்றெரிச்சல் காழ்ப்புணர்ச்சி".... போன்ற எண்ணங்களே ! பின் உன் கருத்தில் எப்படி உண்மை பிரதிபலிக்கும்? உதாரணத்துக்கு "அறிவொளி" என்ற உன் பெயரை "அறியாமையொலி" என்று கூப்பிடுபவர்கள், நீர் நல்லதை செய்தாலும், அதை தப்பென்றே சொல்வார்கள் அது மாதிரி....உன்னை மாதிரி வெண்ணைகளுக்கு புரிந்தால் சரி! இமயமலையை பார்த்து நாய் குறைப்பது மாதிரி உமது கருத்து!
Syed Ali 29 Jan 2012 11:26 pm
முதலில் எம்ஜியார் அணையின் கொள்ளளவை குறைக்க ஒப்புக்கொண்டது அவரது பொறுப்பற்ற தன்மையையும் தூர நோக்கு இல்லாமையையுமே காட்டுகிறது.எதோ ஒரு சாக்கு சொல்லி கேரளாவைச்சேர்ந்த மத்திய நீர்வள ஆணையத்தலைவர் தாமஸ் எம்ஜியாரின் விவரம் குறைந்த மதிநுட்பத்தை பயன்படுத்தி தன மாநிலத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறார்.அணையை திருத்துவது இருக்கட்டும் எம்ஜியாரின் இந்த செயல் மாநிலத்தின் நீர்வளத்தை நஷ்டப்படுத்தி விட்டதே.
Chandru Krishna 30 Jan 2012 12:05 am
சயேத் அலி நண்பரே, உங்கள் கருத்துக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை ! ஏற்கனவே இரவு 10 .08 க்கு பதிவு செய்யப்பட்ட கருத்தே போதுமானது! -அன்புடன் சந்துரு / "அவர் முகத்தை அவரை எதிர்த்து அரசியல் செய்யும் அரசியல் அடி மட்ட மாற்று கட்சிகாரனுக்கு கூட எங்கேயோ ஒரு தொலைவில் பார்த்தால் கூட பிரமித்து போவான். நானே அதற்கு ஒரு உதாரணம்" - எம் ஜி ஆர் அவரது பொறுப்பற்ற தன்மையை என்று தயவுசெய்து சொல்லாதீர்கள், அவர் ஒரு அற்புதம்!
Chandru Krishna 29 Jan 2012 10:08 pm
முன்னாள் அமைச்சர்கள் ராஜா முகமது, சாமிநாதன், அரங்கநாயகம் ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றி ! இதை முதல்வர் "அம்மா" ஆணித்தரமாக சட்டசபையில் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1979 இல் சாமர்த்தியமாக எடுத்த எல்லா நடவடிக்கைகளையும் சொல்ல வேண்டும். குறிப்பாக எதிர்காலத்தை மனதில் கொண்டு தீர்க்கதரிசனமாக நவீன முறையில் முல்லை பெரியார் அணையை புதுபிக்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கையாண்ட விதத்தை சொல்ல வேண்டியது இன்றைய முதல்வரின் தார்மீக கடமை.
Vincent Mohammed 29 Jan 2012 09:59 pm
எதுக்கு வீண் பிரச்சன..... பேசாம MGR-ர எழுப்பி கேட்டுடுவோம்.....!!
Chandru Krishna 29 Jan 2012 10:10 pm
இப்படிப்பட்ட "பொறுப்பற்ற கருத்து" வேண்டாமே.....! முதலில் நாம் நல்ல குடிமகனாக நடந்து கொள்ள முயற்சி செய்வோம்!
Ravudi 29 Jan 2012 12:27 pm
சரியா சொன்னீங்க நன்றி இதற்க்கான ஆதாரங்களையும் நினைவு படுத்தி சேகரித்து வெளி இட்டால் தமிழகத்திற்கு மிகவும் நல்லது தாங்கள் பொறுப்பு வகித்ததர்க்கும் அர்த்தம் இருக்கும்
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs