இலங்கை தயாரிப்புகளை தமிழகத்தில் விற்க தடை!

திங்கள்கிழமை, ஜனவரி 30, 2012, 11:40 [IST]
 Ban Sri Lankan Products Tamil Nadu Aid0136
சென்னை: இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை தமிழக டியுசிஎஸ் கடைகளில் விற்க வேண்டாம் என்றும், விற்பனைக்கு வைத்துள்ள இலங்கைப் பொருள்களை அகற்றிவிடுமாறும் நகர கூட்டுறவு சங்கம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் சக்தி சரவணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

"இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம்" என்ற அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையை வழிக்குக் கொண்டுவர, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே தீர்மானம் கொண்டுவந்தது நினைவிருக்கலாம்.

ஆனால் கூட்டுறவுக் கடைகளில் இலங்கை பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட, "இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம்" குழுவினர், இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளின் முன்னால் உள்ள அலுமாரிகளிலிருந்து அந்தப் பொருள்கள் அகற்றிவிடுமாறும், இனி இலங்கை தயாரிப்புகளை விற்பனைக்கு வைக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உற்பத்தியாகும் பிஸ்கட், சாக்கலேட், மருந்துப் பொருள்கள் போன்றவை கடந்த இரு ஆண்டுகளாகவே தமிழகத்தில் பெரிதாக விற்பனையாகாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Posted by:
English summary
The govt of Tamil Nadu has banned the sale of products of Sri Lanka in Govt retail stores and co operative stores.
User Comments
Nuwara Kolla 31 Jan 2012 05:32 am
தயவு செய்து விஜய்யின் மனைவியையும் பறிமுதல் செய்யவும் !!
nellai thamizan 30 Jan 2012 03:03 pm
வெளிநாடுகளில் " இந்தியன் மளிகைக்கடை " பெயர் வைத்து தான் இலங்கை தமிழர்கள் கடை நடத்துகின்றனர். "இலங்கை மளிகை கடை" என்று பெயர் வைத்தால் இலங்கைகாரன் கூட கடையை எட்டி பார்க்க மாட்டானாம்.
Thenaali Raman 30 Jan 2012 02:07 pm
தமிழகம் அப்படியே இலங்கையில் இன்னமும் அடிமைகளாக இருந்து நம் ஈழத்தமிழரின் மானத்தை வாங்கும் இந்திய அடிமைகள் எல்லோரையும் மீள ஆலித்து தங்களின் குப்பத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
Thenaali Raman 30 Jan 2012 02:05 pm
என இந்த உணர்வு நமது புலம்பெயர் ஈனத் தமிழரிடம் இல்லை?புலம்பெயர் நாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் கடைகள் எல்லாவற்றிலும் இந்தியப் பொருட்களே அதிகமாக இருக்கின்றன ஏன் இவர்களால் இந்தியப் பொருட்களை தடைசெய்ய முடியாது?புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இந்தியப் பொருட்கள் இந்திய ஆடைகளை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.
Syed Ali 30 Jan 2012 01:36 pm
நல்ல முடிவு கூட்டுறவு சங்கங்களில் மட்டுமல்ல குறைந்த பட்சம் மொத்த தமிழ் நாட்டிலும் அவர்கள் பொருட்களை விற்க தடை செய்யுங்கள்.கலாம் போன்ற பொது(சுய)நலவாதிகளையும் புறக்கணியுங்கள்
நீங்கதானே சொன்னீங்க 30 Jan 2012 01:23 pm
ரூபவாஹினியை பார்க்காதீர்கள் என்று கடலோர தென் மாவட்ட மக்களிடம் முதலில் சொல்லுங்கள்..............
Ponnuswamy 30 Jan 2012 12:11 pm
Good initiative. Since Mullivaikal Masscare, I do not buy any Srilankan product in Asian/Foreigners mart in Overseas as well as in India. Also, advised my wife & kids to do the same. I saw some Srilankan Products in Vadapazhni Nilgris last month and some organisations should look into these Super market chains.
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs