முல்லைப் பெரியாறு: தமிழக ஆளுநர் உரைக்கு கேரளா எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 31, 2012, 10:17 [IST]
திருவனந்தபுரம்; முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளா அரசு பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்வதாக தமிழக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் எதிர்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ரோசைய்யா, முல்லை பெரியாறு அணை தமிழகத்தின் கட்டுபாட்டில் இருக்க வேண்டும். 2010ம் ஆண்டு அணை பாதுகாப்பு சட்டத்தில் இதை உறுதி செய்ய வேண்டும். பெரியாறு அணை பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள மதித்து செயல்பட வேண்டும். முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளா பொய் பிரச்சாரம நடத்தி மக்களிடம் பீதியை கிளப்புகிறது என்று குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஜே. ஜோசப், முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

மேலும் புதிய அணை கட்டினால் அணையின் உரிமை, கட்டுபாடு கேரளாவிடம் தான் இருக்கும். அணையின் உரிமையை எந்த காரணத்தை கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளா பொய் பிரச்சாரம் நடத்துவதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அணையின் உண்மை நிலைதான் மக்களிடம் எடுத்து கூறப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஜோசப் வலியுறுத்தியுள்ளார்.
Posted by:
English summary
Kerala on Monday rejected the Tamil Nadu Government’s charge that it was trying “to whip up mass fear” over the issue of the 116-year-old Mullaiperiyar dam. PJ Joseph, Minister for Water Resources, said that Kerala had never indulged in false propaganda over the dam issue.
User Comments
வர்ணாசிரம எதிரி 01 Feb 2012 01:09 am
இன்னும் கேரளாவில் எலெக்ஷன் முடியலியா? எதுக்கு முடிஞ்சு போன கல்யாணத்துக்கு இந்த ஜோசப் இப்போ மோளம் கொட்டிகிட்டு இருக்கான்?
tamilan 31 Jan 2012 01:15 pm
பொய் சொல்றோம் என்று நல்ல தெரிஞ்சிகூட இவங்க தங்களோட நிலைபாட்டை மாத்திக்க மாட்டங்களாம் , ஆனா தமிழகம் தன்னோட நிலைபாட்டை மாத்திக வேண்டுமாம் . என்ன கொடுமை இது. மொதல்ல எல்ல தமிழர்களும் ஒத்துமையா இருந்தா தான் ஏமாறாம இருக்க முடியும். இல்லை என்றல் நாமத்தை போட்டு விட்டு போய்டுவாங்க . உஷாரு
Kanapathypillai Kanakatharan 31 Jan 2012 12:16 pm
மக்களிடம் எடுத்துச்சொன்னால் பச்சைப்பொய் உண்மையென்றாகிவிடுமா, ஆளுனரின் பேச்சை மட்டுமா மலயாளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை . கேடுகெட்டவங்கள்.
கருநாக நிதி 31 Jan 2012 11:32 am
பாரத ரத்னா விருது போல அரிச்சந்திர விருது ஒன்றை உருவாக்கி அதை கேரளா அரசுக்கு தந்து விடலாம். கலைஞர் ஜெயலலிதா புளுகுகளை தூக்கி சாப்பிட்டு விடுவார்கள் மலையாளிகள்.
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs