அரசியலில் குதிக்கப் போவதாக சோனியா மருமகன் ராபர்ட் வதேரா அறிவிப்பு

திங்கள்கிழமை, பிப்ரவரி 6, 2012, 14:35 [IST]
 Robert Vadra Hints At Joining Politics Aid0216
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளர்.

தொழிலதிபரான ராபர்ட் வதேரா இது பற்றி கூறுகையில், அரசியலில் ராகுல் காந்தி இப்போது களத்தில் இருக்கிறார். மக்கள் என்னை விரும்பினால் நிச்சயமாக அரசியல் களத்துக்கு வருவேன் என்றார்.

வதேராவின் மர்ம முடிச்சு

தொழிலதிபராக தம்மை வதேரா காட்டிக் கொண்டாலும் சோனியா குடும்பத்து சொத்து விவகாரங்களை வெளிநாடுகளில் கவனித்துக் கொள்பவராக வலம் வருகிறவர்.

2011ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான "எக்னாமிக் டைம்ஸ்'' நாளிதழில் ராபர்ட் வதேராவின் சொத்துக் கணக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. சாதாரண, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ராபர்ட் வதேரா திடீரென உச்சததுக்குச் சென்று விட்டார்.

ரியல் எஸ்டேட் துறையில் அவர் கொடி கட்டி பறக்கிறார். டி.எல்.எப். நிறுவனத்தில் அவர் பங்குதாரராக உள்ளார். அரியானா முதல் ராஜஸ்தான் வரை அவரது தொழில் சாம்ராஜ்யம் விரிந்து பரந்துள்ளது என அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் நேரடியாக பங்கேற்காமலேயே அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்வதில் வல்லவர் ராபர்ட் வதேராவை அரசியல் உலகம் ஆச்சரியத்துடன் பார்க்கும் சூழலில் அரசியலுக்கு வருகிறாராம் ராபர்ட்! ராகுல் என்ன நினைக்கிறாரோ?

அரசியல் என்பது அரிசிக் கடைக்குப் போவது போலாகி விட்டது.யார் நினைத்தாலும் வரலாம், புகலாம், குதிக்கலாம், குதூகலிக்கலாம் என்றாகி விட்டது.

நல்லவேளை காந்தி இல்லை...!
Posted by:
English summary
Congress president Sonia Gandhi’s son-in-law, Robert Vadra, on Monday hinted at joining politics.
User Comments
Vincent Mohammed 06 Feb 2012 07:10 pm
குதிடா..! கூ...மவனே...!!
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs