துபாயில் தொழிற்ப‌யிற்சி முகாம் துவக்க‌ விழா

வியாழக்கிழமை, பிப்ரவரி 9, 2012, 17:10 [IST]
துபாய்:  துபாயில் யூனிபுராபிட்டியா குழுவின் சார்பில் தொழில் முனைவோருக்கான‌ ப‌யிற்சி முகாம் துவ‌க்க‌ விழா 27.01.2012 அன்று காலை துபாய் சிலிகான் ஒய‌ாசிஸ் அத்தாரிட்டியின் த‌லைமை அலுவ‌ல‌க‌த்தில் ந‌டைபெற்ற‌து.

விழாவில் கலந்து கொண்ட யூனிபுராபிட்டியா இய‌க்குந‌ர் ராம் மோக‌ன் வர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். துபாய் எஸ்.எம்.இ. ஸ்ட்ராடிஜி ம‌ற்றும் பாலிசி இய‌க்குந‌ர் அலெக்சாண்ட‌ர் மாத்யூ வில்லிய‌ம்ஸ் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்தார்.

தொழில் முனைவோர்களை உருவாக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரி்ப்பதும் தான் இந்த பயிற்சி முகாமின் நோக்கம் ஆகும்.

மாத‌த்தில் இர‌ண்டு நாட்க‌ள் ப‌யிற்சி முகாம் நடைபெற்று வ‌ருகிற‌து. வ‌ரும் நாட்க‌ளில் நடக்கும் ப‌யிற்சி முகாம்க‌ளில் கலந்து கொள்ள விரும்புவோர் 050 1005355 எனும் எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

மின்னஞ்சல்: ram.mohan@unipropitia.com
Posted by:
English summary
Unipropitia group is giving vocational training to entrepreneurs in Dubai. The inaugural ceremony of the training camp was held on january 27 in Dubai. Those who want to attend the camp can contact 050 1005355
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs