புவனேஸ்வர்: ஒரிசாவின் கட்டாக்கில் கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநிலத்தின் கலால் தீர்வை துறை அமைச்சர் உதய் சிங் டியோ பதவி விலகி உள்ளார்.
தமது பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு அவர் அனுப்பி வைத்தார்.
கட்டாக் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமையன்று கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தனர். இன்னமும் பலரது நிலைமை ஆபத்தானதாக இருந்து வருகிறது.
இதையடுத்து கலால்துறை அமைச்சர் உதய் சிங் டியோ தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதனிடையே கள்ளச்சாரயத்தில் கலப்பதற்காக அருகில் உள்ள மருந்துக் கம்பெனியில் இருந்து ஒருவகை மருந்து கலக்கப்பட்டதும் வந்தது.
இதையடுத்து அந்தக் கம்பெனியும் இழுத்து மூடப்பட்டது.