ஓசூர் அருகே யானைகள் தாக்கி விவசாயி பலி

வியாழக்கிழமை, பிப்ரவரி 9, 2012, 17:22 [IST]
ஓசூர்: ஓசூர் அருகே காட்டு யானைகள் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாமபாக பலியானார்.

ஓசூர் அருகே உள்ள ராயக்கோட்டை அருகே அதிகாலை நேரத்தில் யானைகள் கூட்டம் ஒன்று வந்துள்ளது. அங்கு வந்த யானைகள் பசி காரணமாக விளை நிலத்திற்குள் புகுந்தது.

அப்போது அங்கு இரவு காவலுக்கு இருந்த பாவடைப்பட்டியைச் சேர்ந்த மூக்கன் என்பவர் அந்த யானைகளை விரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவை மூக்கனை தூக்கிப்போட்டு மிதித்துள்ளன. வலி தாங்க முடியாமல் அவர் போட்ட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர்.

யானைகள் தாக்கியதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிக்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Posted by:
English summary
A farmer has died after a herd of elephants attacked him in an agricultural land near Hosur. The farmer became a victim when he tried to drive away the elephants from the land.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs