கோர்டில் அபராதமாக செலுத்திய பணத்தில் கள்ளநோட்டு: ஊழியர்கள் அதிரிச்சி

வியாழக்கிழமை, பிப்ரவரி 9, 2012, 16:57 [IST]
தூத்துக்குடி: சாத்தான்குளம் நீதிமன்றத்தில் அபராதமாக செலுத்திய பணத்தில் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு இருந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் சாத்தான்குளம், நாசரேத், தட்டார்மடம், மெஞ்ஞானபுரம் ஆகிய காவல் நிலைய வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படு்ம் தகராறு உள்ளிட்ட சிறு வழக்குகளுக்கு அபராதம் செலுத்த சம்பந்தப்பட்டவர்கள் தினமும் இங்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் அபாராதம் செலுத்திச் சென்றனர். அதனை நேற்று நீதிமன்ற ஊழியர்கள் வங்கியில கட்ட சென்றனர். பணத்தை சரிபார்த்த வங்கி பணியாளர் அதில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு இருப்பதை கண்டுபிடித்தார். இது குறித்து நீதி்மன்ற ஊழியர்களிடம் அவர் தெரிவித்தார். அபராத தொகை செலுத்த வந்தவர்கள் கள்ளநோட்டு என்று தெரிந்தே நீதிமன்றத்தில் கட்டினரா, யாரிடம் இருந்து அந்த நோட்டு பெறப்பட்டது என்ற விபரம் தெரியாததால் நீதிமன்ற ஊழியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Posted by:
English summary
Some body has given a fake currency with the face value of Rs.1000 at the Sathankulam court. Since so many pay fine daily, court employees are unable to find the culprit.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs