டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக மூத்த அமைச்சர்களான் பிரணாப் முகர்ஜி. சல்மான் குர்ஷித், கபில் சிபல் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன்சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆ.ராசா பதவி காலத்தில் கொடுக்கப்பட்ட 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்துக்கான விதிமுறைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
2ஜி அலைக்கற்றைக்கான சந்தை விலையை நிர்ணயிப்பது தொடர்பாகவும் அமைச்சர்களுடன் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
இச்சந்திப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகள் தொடர்பாக பிரதமருடன் விவாதித்தோம் என்றார்.
இது முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் என்பதால் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.