For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா: சுப்பிரமணிய சாமி

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்குத் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள சாமி, அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணிய சாமி கொடுத்துள்ள பேட்டி விவரம்:

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சோனியா காந்தியும், அவரது இத்தாலி குடும்பத்தினரும் மறைமுக ஆதரவு அளித்தனர்.

ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவுக்கு எதிரான இயக்கம் என்பதால் அந்த இயக்கத்தை ஒழித்துக் கட்டியவர் மகிந்த ராஜபக்சே.

இதனால் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான் தோல்வியடைந்திருக்கிறது. தமிழ் மக்கள் தோல்வியடையவில்லை என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் சுப்பிரமணிய சாமி

English summary
In remarks that are bound to create controversy, Janata Party president Subramanian Swamy has said that Sri Lankan President Mahinda Rajapaksa should be awarded India’s highest civilian award, Bharat Ratna, for exterminating LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X