கரூரில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள சுயஉதவிக்குழு பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2012, 17:37 [IST]
கரூர்: கரூர் மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் ஷோபனா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

முழு நேர பயிற்சியின் போது பயிற்சி பெறும் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு 25 ரூபாய் தினப்படி வழங்கப்படும். ஒரு மாதத்துக்கான தையல் பயிற்சியில் சேர 35 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விருப்பமுள்ள 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தங்கள் விண்ணப்பங்களை கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாவது மாடியில் செயல்படும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் எழுத்து மூலமாக வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நகர்ப்புற சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தொழில்துறையில் மேம்பாடு அடையலாம். மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 04324-257377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by:
English summary
Karur district collector Shobana has announced that free vocational training will be given to those SHG women who come under BPL. Application should be submitted before february 18 in the Karur collector office. For more details contact 04324-257377
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs