2 மாசமாச்சு சம்பளம் கிடைக்கலையே... ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர் நிறுவன ஊழியர்கள் தவிப்பு!

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2012, 12:56 [IST]
 Jet Kingfisher Airlines Staff Not Paid Aid0216
மும்பை: விமான சேவை துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஜெட் ஏர்வேஸ் மற்றும் கிங்பிஷர் விமான நிறுவனங்கள் கடந்த 2 மாதமாக தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை.

டிசம்பர் மாத சம்பளத்தை இன்னமும் கொடுக்க முடியாத நிலைமைக்கு எதிர்பாராத செலவினங்களே காரணம் என்று கிங் பிஷர் நிறுவனம் தெரிவ்த்துள்ளது. இரண்டு நிறுவனங்களிலும் மொத்தம் 18 ஆயிரம் ஊழியர்கள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாத ஊதியத்தைப் பெறவில்லை.

கிங் பிஷர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வார் இது குறித்து திங்கள்கிழமையன்று தமது ஊழியர்களுக்கு மின் அஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.
Posted by:
English summary
Nearly 18,000 employees of Jet Airways and Kingfisher have not received salaries for two months, a reflection of the deepening crisis in the aviation industry.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs