இலங்கை போர் விமானம் விழுந்து நொறுங்கியது

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2012, 14:16 [IST]
கொழும்பு:இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மிக் 27 ஜெட்ரக போர் விமானம் தலைநகர் கொழும்புக்கு அருகே விழுந்து நொறுங்கியது.

சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவை அடுத்துள்ள புத்தளத்தின் ஹேவனவில் தென்னந்தோப்பு ஒன்றில் விமானம் வீழ்ந்தது.

கட்டுநாயக்க விமான தளத்தில் இருந்து புறப்பட்டு வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் இருந்த விமானி ஹேரத் எந்த காயமுன்றி உயிர் தப்பியுள்ளார்.

தொழில்நுட்பக் கோளாறினால் விமானம் விழுந்ததாக இலங்கை விமானப்படை செய்தித் தொடர்பாளர் அண்டி விஜேயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான போரில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை மிக் 27 ஜெட் ரக விமானங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது ரஷ்ய நாட்டுத் தயாரிப்பாகும்.

மிக சொற்ப எண்ணிக்கையில்தான் இலங்கை இந்த ரக விமானங்களை வைத்துள்ளது. தற்போது அதில் ஒன்று போண்டியாகியுள்ளது.

Posted by:
English summary
A spokesman says a Sri Lankan air force fighter jet has crashed during a training exercise. The pilot ejected before impact and is safe.
User Comments
Kannan Thillai 18 Feb 2012 11:36 pm
உண்மை எதுவும் இன்னும் 2 விமானமு சுடு சாட் VYLUDAPADADU , ஆடு அசரி,இபோ ENNADUKU PAYRCHY SEURANGAL,INDYAVUKU KUNDU PODAVA
prem gopi 14 Feb 2012 09:05 pm
TEST
anand 14 Feb 2012 06:57 pm
இன்னும் ராஜ பக்சே தலையில் விழுந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஜஸ்ட் மிஸ். விமானி ஹேரத் மிஸ் பண்ணிட்டார். நெக்ஸ்ட் டைம் டார்கெட் மிஸ் ஆக கூடாது. ஓகே. விஷ் u ஆள் தி பெஸ்ட்.
போதிதர்மா 14 Feb 2012 02:36 pm
மிக சொற்ப எண்ணிக்கையில்தான் இலங்கை இந்த ரக விமானங்களை வைத்துள்ளது. தற்போது அதில் ஒன்று போண்டியாகியுள்ளது............................... என்ன ஒரு சந்தோசம்!
prem gopi 14 Feb 2012 08:59 pm
அது ஒன்னும் இல்லை எதிரிக்கு ஒரு கண் போயடிசின்னு எடிட்டர் நினைசிட்டாறு.
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST