இஸ்லாமாபாத்: விமானத்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால், கடைசி நேரத்தில் வந்த 2 பயணிகளை, விமான கழிப்பறையில் உட்கார வைத்து கூட்டிச் சென்றுள்ளார் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவன விமானி ஒருவர்.
லாகூர்-கராச்சி இடையிலான விமானத்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் ஏர்லைன்ஸ், விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு வந்தபோதுதான் இப்படி நடந்துள்ளார் விமானி.
வி்மானத்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால் 2 பயணிகளை மட்டும் உட்கார வைக்க முடியவில்லை. இதையடுத்து என்ன செய்வது என்று யோசித்த விமானிக்கு வித்தியாசமான ஐடியா தோன்றியுள்ளது. அந்த இரண்டு பேரையும் டாய்லெட்டில் அமர்ந்து வருமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் சரி என்று கூறி உள்ளே போய் உட்கார்ந்து கொண்டனராம்.
இந்த செய்தியை ஜியோ டிவி வெளியிட்டுள்ளது. நம்மூர் ஏர் இந்தியாவைப் போலவே படு நஷ்டத்தில் இயங்கி வரும் நிறுவனம்தான் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம். இதை நிமிர்த்தி உட்கார வைக்க பாகிஸ்தான் அரசு கடுமையாக முயன்று வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்குமாறு விமான நிறுவனத்தை அது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் கக்கூஸில் உட்கார வைத்து பயணிகளை அழைத்துச் சென்று வித்தியாசமாக சேவையாற்றியுள்ளது அந்த நிறுவனம்.