ஹோண்டுராஸ் நாட்டு சிறையில் தீ விபத்து: 400 கைதிகள் பலி

வியாழக்கிழமை, பிப்ரவரி 16, 2012, 10:18 [IST]
டெகுசிகால்பா (ஹோண்டுராஸ்): ஹோண்டுராஸ் நாட்டின் சிறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சிறை அறைகளுக்குள் அடைபட்டுக் கிடந்த கைதிகள் 358 உயிரிழந்துள்ளனர்.

கோமயாகுவா என்ற நகரின் சிறையில் அடைபட்டுக் கிடந்த கைதிகள் சுமார் 475 பேர், உடனடியாக இந்தத் தீவிபத்தில் இருந்து உயிர் தப்பினர் என்று அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் ஹெக்டர் இவான் மெஜியா தெரிவித்துள்ளார். மேலும் 21 பேர் இதில் படுகாயமடைந்துள்ளனர்.

சிறைக் கம்பிகளுக்குப் பின்னே அலறிக் கொண்டிருந்த பலரை சிறை அதிகாரிகள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், அவர்களிடம் அதற்கான சாவி இல்லாததால் உயிரிழப்பு அதிகரித்துவிட்டது என்றனர். கோமயாகுவா தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜோசுவா கார்சியா, தான் ஒரு நரகத்தை அதுவும் படுபயங்கரக் காட்சியைக் கண்டதாகவும், அதுவும் தீயில் இருந்து தப்புவதற்காக நடந்த களேபரத்தில் தங்கள் உடன் இருந்த சிறைக் கைதிகளையும் தள்ளிவிட்டு பெரும் குழப்பத்துக்கு இடையே அவர்கள் மீதேறித் தப்பியதாகவும் தெரிவித்தார்.

'எங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. சிறை செல்களுக்கான சாவி எங்களிடம் இல்லை. அவர்களது பாதுகாவலர்களும் உடனடியாக அழைக்கப்பட இயலவில்லை என்றார் கார்சியா.

மின்கசிவினால் அல்லது சிறைக்குள் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கும் எனக் கூறப்படுகிறது கோமயாகுவா நகரின் சாண்டா டெரசா மருத்துவமனைக்கு சிறைக் கைதிகளின் உறவினர்கள் பலர் கூட்டம் கூட்டமாக விரைந்துள்ளனர். இந்த நகரம் தலைநகரமான டெகுசிகால்பாவில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ளது
Posted by:
English summary
More than 350 convicts died screaming and spluttering when a huge fire ripped through a prison in Honduras, reducing large swathes of the complex to a blackened husk
User Comments
vandu 16 Feb 2012 11:34 am
ஹோண்டுராசில் இது போல நடப்பது புதிதல்ல. ஏதாவது ஊர்வலம், பேரணி, புரட்சி இப்டி ஈடுபடுபவர்களை கைது செய்து ஒரே சிறையில் அடைத்து அன்று இரவில் தீ விபத்து ஏற்படுத்தி விடுவார்கள்.. சாட்சி: இதில் ஒரு சிறை அதிகாரி கூட உயிரிழந்திருக்க மாட்டார்
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST