ராஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா?, செய்தது அமெரிக்காதான்-இலங்கை அமைச்சர்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 17, 2012, 12:04 [IST]
 Cia Plotted Rajiv S Murder Not Prabhakaran Aid0091
கொழும்பு: ராஜீவ் காந்தியைக் கொன்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரும் பாதகம் ஏற்படும் என்பதை பிரபாகரன் உணராமலா இருந்திருப்பார். மேலும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கு அவர் என்ன முட்டாளா. இந்த காரியத்தை செய்தது அமெரிக்காதான். பிரபாகரனுக்கே தெரியாமல், தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வைத்து ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொலை செய்துள்ளது என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என நான் திடமாக நம்புகிறேன்.

ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிய பாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது. பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை.

காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிய பிராந்தியத்தில் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்திருந்ததால்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Posted by:
English summary
US's intelligens CIA plotted Rajiv's murder, not LTTE chief Prabhakaran, said Lankan Minister Wimal Weerawansa. He said, Prabhakaran is not a fool to take such a big thing. CIA used LTTE elements in Tamil Nadu without the knowledge of Prabhakaran and eliminated Rajiv Gandhi, he said.
User Comments
angel 13 Mar 2012 08:32 pm
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியவர்கள் பலர் தமிழ் நாட்டில் இருந்திருக்கிறார்கள் . அவர்கள் சிலரை ராஜீவை ஒழிக்க முயன்றவர்கள் பாவித்திருக்கலாம். என்ன இருந்தாலும் ஒரு தனி மனிதனுக்காக ஒரு இனத்தை அழித்து விட்டது இந்தியா. இன்னும் தட்டிக் கேட்காமல் இருந்தால், கூக்குரல் போட்டு " நமக்கென்ன" என்று இருந்தால், ஒவ்வொரு இந்தியனையும் இந்த பழி சேரும்.
Raasappu Sinnathambi 19 Feb 2012 07:47 pm
விடுதலை?புலிகள் புல்லை தின்று வளர்ந்தவாகள் அவர்களுக்கு மாலை போடவே தெரியாது எந்த கொலைகளையும் செய்யவில்லை உன்னதமானவர்கள் உத்தமர்கள் காந்திய வாதிகள் இது யாவரும் அறிந்த உண்மை
NEELAMEGAN 19 Feb 2012 05:35 pm
இது உண்மையாக கூட இருக்கலாம் . பிரபாகரன் ஒரு சிறந்த தலைவர் .ஒரு தலைவர் இதையெல்லாம் யோசிக்கமலா இருந்திருப்பார் .
Enna Ithu 18 Feb 2012 09:16 am
ராஜீவ் உயிரோடு இருக்கும்போதே யாசர் அராபத் ராஜீவிற்கு சொன்னது தான் இது. ராஜீவ் கொலையின் மூளையே சந்திரா சாமி. இந்த கொலையில் சுப்பிரமணிய சாமிக்கு உள்ள தொடர்பை திருச்சி சிவா யூடுபில் புட்டுப்புட்டு வைப்பதை பாருங்கள். விடுதலை புலிகளுக்கும் ராஜீவ் கொலைக்கும் தொடர்பில்லை.
x y 18 Feb 2012 02:00 am
சீனாவின் கைக்கூலியாக பேசுகிறான் இந்த கூறுகெட்ட கூமுட்ட மந்திரி இந்த கூற்றை இந்தியாவுடன் சேர்ந்துகொண்டு தமிழர்களை அழிக்கும்போது சொல்லாமல் இருந்துவிட்டு இப்பொழுது உலருவதன் மர்மம் என்ன?? இந்தியா அமெரிக்காவுடன் காட்டும் நெருக்கத்தை தடுக்கவே சீனாவின் தூண்டுதலின் பேரில் பாகிஸ்தானின் துணையுடன் பினாத்துகிறான்.
nanban 18 Feb 2012 01:01 am
இலங்கை போர்க்குற்றம் புரிதுள்ளது. அமெரிக்கா அதை கூண்டில் ஏற்ற போகிறது. அதற்குப் பயந்து இந்த மாதிரி திசை திருப்பும் நடவடிக்கை எடுக்கிறது. நாம் ஏமாறாமல் இலங்கையை குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம். நண்பன்.
shaan mugam 19 Feb 2012 04:20 pm
kaama laa,a
வர்ணாசிரம எதிரி 17 Feb 2012 11:54 pm
ராஜிவை கொன்ற தாணு,சிவராசன் போன்றோர் முன்னாள் புலிகள். அவ்வளவு தான். இதற்கும் புலிகளுக்கும் என்ன தொடர்பு? முன்னாள் புலிகள் செய்தாலும், அது புலிகள் செய்ததாகத் தான் கணக்கு என்றால் டக்லஸ்,வரதராஜ பெருமாளை ஆதரிக்கும் இந்தியா ஒரு தீவிரவாத நாடு தானே? முனால் புலியான கருணாவை ஆதரிக்கும் இலங்கையும் ஒரு தீவிரவாத நாடு தானே?
Chandru Krishna 18 Feb 2012 01:52 am
நண்பா, ஒரு முக்கிய செய்தி: சிவராசன் அம்மா ஒரு சிங்கள பெண்! மேலும், சிவராசன் போராளிகளின் இயக்கத்தில் இருந்து எப்போதோ விலக்கப்பட்டவன்; சிவராசன் பெங்களூரில் தங்கி இருந்த வீடும் சு சாமி நண்பரால் ஏற்பாடு செய்யப்பட்டது! நயவஞ்சகமாக ஒப்பந்தத்தை மீறி சிவராசன் கொல்லபட்டான், உயிரோடு இருந்தால், நாளை உண்மை வெளியே வந்து விடும் என்று! ராஜீவ் கொலை வழக்கில் 50 கேளிவிகளுக்கு மேல் பதில் இல்லை! இந்நிலையில் தீர்ப்பு வழங்கியது உலக மகா மோசடி! எம்.ஜி.ஆர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், வரலாற்றை மாற்றி எழுதி இருப்பார்
வர்ணாசிரம எதிரி 17 Feb 2012 11:52 pm
காங்கிரச்காரரக்ல் தன்னிடம் ஒரு மிக பெரிய்ய பொறுப்பை செய்ய சொல்லி பணம் கொடுத்திருக்கிறார்கள் -- இது சிவராசன் தனது டைரியில் எழுதி வைத்திருந்த குறிப்பு. இந்த டைரி சி.பி.ஐ விசாரணையில் உள்ள ஆவணமும் கூட. இதை ஏன் விசாரிக்கலா? ஏன் ஒரு காங்கிரஸ் காரன் கூட சாவல? ஏன் எந்த காங்கிரஸ் காரனும் இதை பத்தி பேச மாட்டேங்கிறான்?
வர்ணாசிரம எதிரி 17 Feb 2012 11:49 pm
திருச்சி வேலுசாமி சு. சாமியை செய்த குறுக்கு விசாரணையில் கேட்ட ஒரே கேள்வி: "ராஜீவ் செத்த அன்னிக்கு நீங்கள் டெல்லியில் இருப்பது தான் செடியுலில் உள்ளது. அதற்க்கு விமான டிக்கெட்டும் ஏற்க்கனவே பதிவு செயப்பட்டும் இருந்தது. ஆனால் எவருக்கு தெரிவிக்காமல், சிறி பெரும்பதூர் வழியாக நீங்கள், பெங்களூர் சென்று, அங்குள்ள விமான நிலையத்தில் பல மணி நேரம் இருந்துவிட்டு, பிறகு டெல்லி சென்றதன் மர்மம் என்ன?" -- இந்த கேள்விக்கு பதில் சொல்லாம வேர்க்க விறு விருக்க முழிச்சிகிட்டு நின்னான் அந்த சு.சாமி நாதாரி.
வர்ணாசிரம எதிரி 17 Feb 2012 11:40 pm
ராஜீவ் செத்த அடுத்த வாரம் கிட்டு வெளியிட்ட மறுப்பு அறிக்கையையும், தமிழ் நாட்டில் மாலை முரசில் அவர்கள் அளித்த மறுப்பு அறிக்கையையும் இங்க நிறைய பேரு படிக்கில போல?
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST