1 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை தரும் இந்திய நிறுவனங்கள்!

சனிக்கிழமை, பிப்ரவரி 18, 2012, 15:53 [IST]
 Indian Companies Provide 1 Lakh Job Aid0136
வாஷிங்டன்: ஒரு லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்றன அங்குள்ள இந்திய ஐடி நிறுவனங்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் பலவும் அமெரிக்காவில் பல கோடி ரூபாயை கூடுதலாக முதலீடு செய்துள்ளன. பல புதிய வேலையாய்ப்புகளை அங்கு உருவாக்கி வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி நிறுவனங்கள் மூலம் மட்டுமே 1 லட்சம் அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 280000 பேர் மறைமுக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 200000 பேர் அமெரிக்கர்களே. மேலும் பல லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்தகவலை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்திய ஐடி நிறுவனங்களின் பங்கு பெருமளவு உள்ளதென்றும், சுமார் 43 மாகாணங்களில் உற்பத்தி, கட்டமைப்பு என பல்வேறு துறைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்திய நிறுவனங்களின் இந்த பங்களிப்பால், அமெரிக்க வேலையின்மை விகிதம் கணிசமாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் இந்தியர் மற்றும் சீனர்களை பணிக்கு எடுக்கக் கூடாது என அதிபர் ஒபாமா கூறிவரும் நிலையில், இந்திய நிறுவனங்களே அமெரிக்கர்களை அதிக அளவு பணிக்கு தேர்வு செய்ய ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய - அமெரிக்க இடையே கடந்த ஆண்டு மட்டும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. இது இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என நிருபமா ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Posted by:
English summary
Indian companies have invested more than $26 billion in the US in the last five years and the IT companies employ more than one lakh people in that country, New Delhi's top diplomat in Washington has said.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST