இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

சனிக்கிழமை, பிப்ரவரி 18, 2012, 17:49 [IST]
 Olympic Gold Hockey Will Be Awarded Aid0180
மும்பை: லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றால், ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஹாக்கி கூட்டமைப்பு மற்றும் நிம்பஸ் ஸ்போர்ட்ஸ் ஆகியவை இணைந்து, உலக சீரிஸ் ஹாக்கிப் போட்டியை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளன. இப்போட்டிகள் வரும் 29ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மும்பையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது,

இந்த ஆண்டு லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நாளை டெல்லியில் துவங்குகின்றது. இதில் இந்திய ஹாக்கி அணி தகுதி பெற்றால் ஒவ்வொரு வீரர்களும் ரூ.5 லட்சம் வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

மேலும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால், இந்திய ஹாக்கி அணிக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகையும், வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.50 லட்சமும் வழங்கப்படும் என்றனர்.
Posted by:
English summary
World Series Hockey (WSH) organisers has announced a cash award of Rs.2 crore for the Indian hockey team, if they win the gold medal in the upcoming London Olympics. If Indian team win silver, the cash award will come down as Rs.1 crore.
User Comments
kundaan saddi 19 Feb 2012 01:59 pm
"லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றால், ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது." இப்படி அறிவிப்பு விடுவதும் ஒருவகை பெட்டிங் அல்லவா !
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST