பாகிஸ்தானில் மசூதி அருகில் குண்டு வெடிப்பு - 21 பேர் பலி, 45 பேர் படுகாயம்

சனிக்கிழமை, பிப்ரவரி 18, 2012, 18:50 [IST]
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள மசூதிக்கு வெளியே தற்கொலைப் படையை சேர்ந்த நபர் ஒருவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் பலியாகினர். மேலும் 45 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் குர்ராம் என்ற மலைப்பிரதேசம் உள்ளது. அங்குள்ள பராஷினர் என்ற மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதியின் அருகே மசூதி ஒன்று உள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து மசூதியில் இருந்து பக்தர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப் படையை சேர்ந்த மர்மநபர், உடலில் சுமந்து வந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். இதில் விறுவிறுப்பான சந்தை பகுதியி்ல் இருந்த வாகனங்களும், கடைப் பகுதிகளும் சேதமடைந்தன. 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலை பரிதாபமாக இருப்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. காயமடைந்தவர்களை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை.
Posted by:
English summary
Atleast 21 people were killed and 45 others injured, after a suicide bomb attack in the rush market place near a mosque in Pakistan.
User Comments
Ezhumalai PMP 18 Feb 2012 07:50 pm
வெள்ளிக் கிழமை, விடியும் வேளை குண்டு வெடிக்கும் ஓசை கேட்டேன்.... எத்தனை பேர் இறந்தார்கள் என்றறிய செய்தி கேட்டேன்.
சரண்ராஜ் 19 Feb 2012 12:27 am
ஆர் எஸ் எஸ் காரர்கள் அங்கயும் ஊடுருவி விட்டார்களோ? இந்தியா முழுவது குண்டுவைத்துவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, இப்போது மாட்டிக்கொண்டு கம்பி என்னுகிரார்களே...கேவலமாய்.
Rasam Paayaasam 19 Feb 2012 01:14 am
அதே "வெள்ளிக்கழமை ஒரு குடுமியின் குஜாலை கோவிலில் நான் கேட்டேன்"
புன்னகை மன்னன் 19 Feb 2012 03:37 am
டேய் பாடு ஏழுமலை.. நீ அந்த புரோகிதனோடு திருப்பரங்குன்றத்துல நின்னு சிரிச்சேன்னு வையி, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்..
Komberi Mookan 19 Feb 2012 10:00 am
மண்டு மண்டு ..... அந்த வெடிகள் மும்பை கோவையிலும் உண்டு .... நாளை உனக்கும் இருக்கும் மலர்ச்செண்டு .... நீ ஆனந்தப்படலாமா அதை கண்டு ..... எவனுக்கும் கெடையாது ஆறடி லேண்டு.....
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST