அமெரிக்க நீதிமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிரான வழக்கில் மீண்டும் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 19, 2012, 13:18 [IST]
நியூயார்க்: 1984-ம் ஆண்டு சீக்கியர் படுகொலை தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமெரிக்காவில் தொட்ராப்பட்ட வழக்கின் விசாரணை மார்ச் 15- ந தேதி நடைபெற உள்ளது.

வழக்கின் பின்னணி

1984-ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல ஆயிரம் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான சீக்கியர்களின் உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் ஏற்படுத்திய சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

மீண்டும் விசாரணை

அமெரிக்க நீதிமன்ற சம்மன்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி. இதற்காக ச்பர்வால், நோர்டின் மற்றும் பிங்க்வெல் ஆகிய வழக்கறிஞர்களையும் நியமித்திருந்தது. வழக்கில் கூடுதல் தகவல் தாக்கல் செய்ய கடந்த ஆண்டு ஜூன் 24-ந் தேதிவரை கால அவகாசமும் காங்கிரஸ் கட்சி கோரியிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி உரிய பதிலளிக்கவில்லை. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் மார்ச் 15-ந் தேதி நடைபெற உள்ளது.

1984 கலவரத்தில் படுகாயமடைந்து உயிர் தப்பியோருக்கு காங்கிரஸ் கட்சி 17. பில்லியன் டாலர் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பது சீக்கியர்களின் கோரிக்கை.
Posted by:
English summary
A US court is set to hear March 15 a plea for "default judgment" against India's Congress party for failing to defend charges of conspiring, aiding, abetting, organizing anti-Sikh riots in November 1984.
User Comments
horlicks thirudan 19 Feb 2012 01:32 pm
சிக்கு பசங்கள் இதை வைத்து காசு பன்னுரானுங்கோ! காசு கிடைத்தவுடன் மறுபடியும் காலிஸ்தான்தான்! படி கர்டாகிய இவைகளே இந்திராவை சுட்டு கொன்றதனால் இவர்களை நம்ப முடியாது. தாலிபானை விட மோசமானவர்கள்.
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST