மாற்றுத்திறனாளி பெண்ணை விமானத்திலிருந்து இறக்கி விட்ட மனிதநேயமற்ற ஸ்பைஸ்ஜெட் விமானி

திங்கள்கிழமை, பிப்ரவரி 20, 2012, 14:42 [IST]
 Differently Abled Passenger Off Loaded Aid0128
கொல்கத்தா:  கொல்கத்தாவில் இருந்து கோவா புறப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை பயணம் செய்ய அனுமதி அளிக்காத ஸ்பைஸ்ஜெட் விமானி மனிதநேயமே இல்லாமல் நடந்து கொண்டு அவரை கீழே இறக்கி விட்டார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஜீஜா கோஷ் (42). மன நலன் குன்றியவர். அவர் கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் செரிபரல் பால்ஸியில் சிறப்பு ஆசிரியையாக பணிபுரிகிறார். அவர் நேற்று கொல்கத்தாவில் இருந்து கோவா செல்ல ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறினார். ஆனால் அவரை பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறி விமானி அவரை கீழே இறக்கி விட்டார்.

சக பயணிகளும், இவரும் பலமுறை கெஞ்சியும் கூட அந்த விமானி மனம் இறங்காமல் நடந்து கொண்டுள்ளார்.

கோஷ் இங்கிலாந்தில் படித்த காலத்தில் அவர் தனியாகத் தான் வாழ்ந்துள்ளார். அப்படி இருக்கையில் இங்கே தனியாக பயணம் செய்ய அனுமதிக்காததால் அவர் ஆத்திரம் அடைந்தார். அவர் இந்தியாவுக்குள்ளும் சரி, வெளிநாடுகளுக்கும் சரி தனியாக விமானத்தில் பலமுறை பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறியதாவது,

என்னை கீழே இறக்கிவிட்டவருக்கு விமானியாக இருக்கும் தகுதியே இல்லை. நான் எவ்வளவோ கூறியும், அவர் என்னை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை என்றார்.

தனக்கு நேர்ந்தது தனக்கு மட்டுமல்ல தன்னைப் போன்ற அனைவரையுமே அவமதிப்பது போன்றாகும் என்றும், அதனால் அந்த விமானி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டதுடன் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

ஏற்கனவே இதுபோல பல சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. நடிகர் பிருத்விராஜ் என்கிற பப்லுவின் மன நலம் குன்றிய மகனை பெங்களூர் விமான நிலையத்தில் இப்படித்தான் அநாகரீகமாக நடத்தினார்கள் என்பது நினைவிருக்கலாம். இப்போது இப்படி நடந்துள்ளது.
Posted by:
English summary
A pilot has offloaded a differently abled woman from a SpiceJet flight from Kolkata to Goa on Sunday. SpiceJet not only appologised but also promises to take action against the pilot.
User Comments
First Namenatarajan Balakrishnan 23 Feb 2012 09:49 am
அந்தா விமான கம்பனி மாறன் தயோளிகளுடையது !அவனுகளை செருப்பால் அடிக்க வேண்டும் !அவன் கொட்டைகளை நசுக்க வேண்டும் !
Chitta 20 Feb 2012 11:07 pm
காந்தி அடிகள் நாட்டிலே, அன்னை தெரேசா வாழ்ந்த நாட்டிலே இந்த கொடுமை, மனித நேயம் மடிந்து போனதற்கு இதுவே சாட்சி.
saamy 20 Feb 2012 04:47 pm
ஏம்மா மாதர் சங்க தலைவிகளா....... எங்கமா போனீங்க ......அறையும் குறையுமாய் ஆடும் சினிமா நடிகைகளுக்கு எதாவது பிரசைனின கொடி பிடிக்கிரிங்க இதுக்கெல்லாம் வரமாடிங்கள...????
Good for Hell 20 Feb 2012 11:35 pm
சங்கமெல்லாம் காசுன்னா வரும்
edward solomon 20 Feb 2012 03:44 pm
ஏன்டா இப்படி ஈன பய புள்ளைளா இருப்பிங்க.
R KUMAR 20 Feb 2012 03:39 pm
மனநலன் குன்றியவர் என்கிறார்கள்.கல்லூரியில் சிறப்பு ஆசிரியர் என்கிறார்கள்.ஒன்றும் புரியவில்லை.இருந்தாலும்,ஒன்றை தெளிவு படுத்த வேண்டும்.மன நலன் குன்றியவர்களை விமானத்தில கூட்டி செல்லக்கூடாது என்று விதி எதுவும் இருக்கிறதா.
Mohan Mohan 20 Feb 2012 04:03 pm
மன வளர்ச்சி குறைந்தவராக இருக்கலாம்
Mohan Mohan 20 Feb 2012 04:12 pm
திருத்தம் : நடமாடும் தன்மை குறைந்தவர் (உடல் வளம் )
edward solomon 20 Feb 2012 03:38 pm
நன்னாரி நாதாரி பய உள்ள.
hussain 20 Feb 2012 03:19 pm
இந்த மாதுரி பிரச்சினைகள் நடந்தும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
Komberi Mookan 20 Feb 2012 03:04 pm
அவன் விமானியா இல்ல பேமானியா .... சுத்த சோமானியா இருக்கானே ...
Mohan Mohan 20 Feb 2012 02:53 pm
மனிப்பு மட்டும் போதுமானது அல்ல , நஷ்ட ஈடும் வழங்க வேண்டும்
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST