சிபிஐ, விசாரணை அமைப்புகளுடன் ஊழல் கண்காணிப்பகம் நாளை முதல் ஆலோசனை

திங்கள்கிழமை, பிப்ரவரி 20, 2012, 15:00 [IST]
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கின் விசாரணைகள் தொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு மற்றும் வருவாமன வரித்துறையினருடன் நாளை முதல் மத்திய ஊழல் கண்காணிப்பகம் ஆலோசனைகளை நடத்தத் தொடங்குகிறது.

அமலாக்கப் பிரிவு இயக்க இயக்குநர், வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ இயக்குநர் ஆகியோரை ஊழல் கண்காணிப்பகம் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் விசாரணைகளை இந்த அமைப்புகளின் இயக்குநர்கள் ஊழல் கண்காணிப்பகத்திடம் தாக்கல் செய்வர்.

ஆ. ராசா அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 உரிமங்களை ரத்து செய்த தீர்ப்பளித்திருந்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையின் விவரங்களை ஊழல் கண்காணிப்பகத்திடம் தாக்கல் செய்ய அறிவுறுத்தியதையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சி.பி.ஐ இயக்குநருடன் நாளை ஊழல் கண்காணிப்பக ஆணையர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

அமலாக்கப் பிரிவு இயக்குநருடன் நாளை மறுநாளும் வருமான வரித்துறை ஆணையருடன் பிப்ரவரி 24-ந் தேதியும் ஊழல் கண்காணிப்பக ஆணையர் பிரதீப் குமார் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைகளின் முடிவில் 2ஜி விசாரணையின் அடுத்த கட்ட நகர்வும் அடுத்த டார்கெட்டும் தெரியவரும்.
Posted by:
English summary
The probe into the 2G scam has received a momentum with Central Vigilance Commission calling chiefs of all concerned probe agencies to appear before it for briefing on the status and the blue print for further investigation.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST