இத்தாலிய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய படகில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

திங்கள்கிழமை, பிப்ரவரி 20, 2012, 10:24 [IST]
கொல்லம்: கேரள கடல்பகுதியில் இத்தாலியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக மீனவர்களின் படகை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

கேரள மாநிலம் ஆலம்புழா கடலில் மீ்ன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 பேர் மீது அவ்வழியே சென்ற இத்தாலி நாட்டு எண்ணெய் கப்பலில் இருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜீஸ் பி்ங்கோவும், குமரி மாவட்டத்திலிருந்து தற்காலிகமாக இடம் பெயர்ந்து மீன்பிடி தொழில் செய்து வரும் செலஸ்டின் வாலன்டைனும் பரிதாபமாக படகினுள் பலியாகினர்.

நடுக்கடலில் நடந்த இந்த கொடூர கொலைகள் தொடர்பாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த 2 பாதுகாவலர்களை கேரள போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கேரள மாநிலத்திலும், எல்லை பகுதியான குமரியிலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தாலிய கப்பலின் பாதுகாப்பு படை வீரர்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி 2 உயிர்களை பலி கொண்ட மீன்படி படகில் தடயவியல் (திருவனந்தபுரம்) நிபுணர்கள் ஆய்வு நடத்தினர்.

ஆய்வில் துப்பாக்கி குண்டு தாக்குதலில் சிதைந்த படகின் மேல்கூரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், ரத்தம் கொட்டிய பகுதிகளையும், துப்பாக்கி தோட்டா, மற்றும் துப்பாக்கி தோட்டாவின் வேகம், அதன் நீளம், அகலம், சேதம் அடைந்த பகுதியின் அளவு போன்ற பல்வேறு தடயங்களை காலை முதல் மாலை வரை சுமார் 6 மணி நேரம் சோதனை நடத்தினர்.
Posted by:
English summary
Forensic department officials conducted a search in the boat that was attacked by the guards of an Italian ship in the seawaters of Kerala. In the mean while, Kerala police have arrested 2 Italian gurads for shooting 2 TN fishermen to death.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST