உள்நோக்கத்துடன் 'சர்ச்சை கருத்து, படம் வழக்கு': யாகூ நிறுவனம்

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 21, 2012, 17:31 [IST]
 Suit On Objectionable Content Motivated Aid0216
டெல்லி:யாகூ உள்ளிட்ட 21இணைய தளங்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் படங்களையும் வெளியிடுகிறது என்று தொடரப்பட்ட வழக்கு உள்நோக்கம் கொண்டது என்று யாகூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வ்ழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பேஸ்புக், டுவிட்டர் போல் தமது இணையதளம் சமூக வலைதளம் அல்ல என்றும் இ மெயில் மற்றும் சாட்டிங் வசதிகளையே யாகூ நிறுவனம் அளிப்பதாகவும் கூறி தமது நிறுவனத்தை இவ்வழக்கில் இருந்து விடுவிக்குமாறு யாகூ நிறுவனம் கூறியிருந்தது.

இது தொடர்பாக பிப்ரவரி 17-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் யாகூவுக்கு உத்தரவிட்டிருந்தது.

மனுதாரரையும் இன்றைக்குள் விளக்கமான பதிலைத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கூறியிருந்தது.

யாகூ நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில். தமக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உள்நோக்கம் இருக்கிறது என்று கூறியுள்ளது. இதனால் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
Posted by:
English summary
Yahoo India, facing trial for hosting objectionable material on its website, has told a Delhi court that the suit against it was ‘motivated’ and should be dismissed.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST