இனி சென்னைக்கு 3, பிற பகுதிகளுக்கு 6 மணி நேரம் மின்வெட்டு?

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 21, 2012, 16:33 [IST]
 Chennai 3 Other Parts Have 6 Hours Aid0128
சென்னை: சென்னையில் நிலவி வரும் மின்வெட்டை 1ல் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கவும், பிறபகுதிகளில் 6 மணி நேரமாகக் குறைக்கவும் மின்வாரியம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் 8 முதல் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படுகின்றது. சென்னையில் மட்டும் தினமும் 1 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இந்த கடும் மின்வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல குறு, சிறு தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்ப்டடுள்ளது. பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் நிலவி வரும் மின்வெட்டை 1ல் இருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கவும், பிற பகுதிகளில் 6 மணி நேரமாகக் குறைக்கவும் மின்வாரியம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தவிர தொழிற்சாலைகளுக்கு வழங்கும் மின் வினியோகத்தை சற்று அதிகரிக்கவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

மின்வாரியத்தின் பரிந்துரைகள் முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் இந்த புதிய மின்வெட்டு நேரம் அமலுக்கு வரும் என்று மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted by:
English summary
TNEB has recommended the TN government to increase the powercut time of Chennai from 1 to 3 hours and to reduce the timing from 8 to 6 hours in other parts of the state.
User Comments
Enna Ithu 05 Mar 2012 12:42 am
அடுத்த தேர்தலில் சோலார் பேணல் தரும் கட்சிக்குத்தால் என் வோட்டு.. என்ன சொல்றீகப்பூ..
R KUMAR 21 Feb 2012 06:25 pm
நல்லா சொல்லுறாங்கய்யா கணக்கு
R KUMAR 21 Feb 2012 06:30 pm
தினமும் பவர்கட் ஆகுற கணக்கு மட்டும் நல்லா சொல்லுறாங்க..மின்சார உற்பத்திக்கு என்ன திட்டம் இருக்கு,எத்தனை பவர் பிளான்ட் கமிஷன் பண்ணுற ஸ்டேஜ்ல இருக்கு ,எத்தனை பிளான்ட் கட்டுமானாப்பணி முடியும் தருவாயில் இருக்கு,கட்டுமானாப்பணி பாதி முடிந்தது எத்தனை.எத்தனை திய பவர் பிளாண்டுக்கு அப்புருவல் கொடுத்திருக்கு..இந்த மாதிரி கணக்கு ஒன்னும் மின்சாரத்துறை மந்திரியிடம் இருந்து வரவே இல்லை.திமுக அரசின் பொது சாதாரண கிராமத்து ஆளுக்கு கூட தெரியும் ,ஆற்காடு வீராசாமிதான் மின்சார துறை மந்திரி என்று.ஆனால் (தொடரும்)
R KUMAR 21 Feb 2012 06:35 pm
தொடர்ச்சி.)..இந்த அதிமுக ஆட்சியில் யார் மின்சாரத்துறை அமைச்சர் என்றே தெரியவில்லை.அவர் மக்களுக்கு முன் தோன்றி ஒரு முறையாவது என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் எப்படி அடுத்தாண்டுக்குள் இதை சரி செய்வார்கள் என்று தொலைகாட்சி மூலமாவது சொல்லியிருக்கிறாரா.போன ஆட்சியில் ஒரு இரண்டு மணி நேர பவர்கட்டுக்கு ,ஆற்காடு தினமும் டிவி செய்தியில் பத்திரிக்க கார்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். எந்த ஒரு திட்டமும் இல்லாத அரசாக ஜெயா அரசு இருக்கிறதே..கொடுமைடா சாமி
Mugundan 21 Feb 2012 06:25 pm
ஓகே, தினமும் இதே நியூஸ் தான் சொல்கிறார்கள், ஆனால் declared நியூஸ் வர காணோம். என்னமோ போங்க வெறுத்து போச்சு.
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST