சென்னை வங்கியில் ஒரே மாதத்தில் 2வது துணிகர கொள்ளை-வங்கிகளின் அசட்டையால் மக்கள் அதிருப்தி

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 21, 2012, 8:54 [IST]
சென்னை: வங்கிகளில் கண்காணிப்புக் காமராக்களைப் பொருத்துங்கள், காவலர்களை நியமியுங்கள் என்று காவல்துறை எத்தனை முறை அறிவுறுத்தினாலும் அதை கண்டு கொள்ளாமல் வங்கி நிர்வாகங்கள் அசட்டையாக உள்ளன. இதனால் மக்களின் பணத்தை கொள்ளையர்கள் பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த ஒரு மாதத்திற்குள் சென்னையில் 2வது முறையாக வங்கி ஒன்றில் துணிகரமாக கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது மக்களை அதிர வைத்துள்ளது.

சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் கடந்த மாதம் 23ம் தேதிதான் பிற்பகல் வாக்கில் 4 வாலிபர்கள் துப்பாக்கி முனையில் ரூ. 18 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் இதுவரை துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதே பாணியில் ஒரு வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

சென்னை கீழ்க்கட்டளை மேடவாக்கம் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கி கடந்த 2 ஆண்டுகளாக அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் 15 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று பகல் 2 மணிக்கு வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாப்பிட சென்றனர். வங்கி முதன்மை காசாளர் கோபாலகிருஷ்ணன் பாதுகாப்பு பெட்டக அறையை பூட்டிவிட்டு சாப்பிட சென்றுவிட்டார். வங்கி மேலாளர் சண்முகசுந்தரம் தனது அறையில் இருந்தார். மேலும் ஒரு பெண் உள்பட 10 வாடிக்கையாளர்களும் உள்ளே இருந்தனர்.

அப்போது 4 பேர் வங்கிக்குள் வந்தனர். அவர்கள் முகத்தை கைக்குட்டையால் கட்டி மூடி இருந்தனர். அவர்களில் 2 பேர் மேலாளர் அறைக்கு சென்றனர். மேலாளர் சண்முகசுந்தரத்தை துப்பாக்கி முனையில் மிரட்டி சத்தம் போடக் கூடாது என்று அமர வைத்தனர்.

பின்னர் அவர்களில் 2 பேர் அங்கிருந்த வாடிக்கையாளர்களை மிரட்டி அமர வைத்தனர். அவர்களிடம் இந்தி கலந்த தமிழில் பேசி மிரட்டியுள்ளனர்.

பின்னர் ரெஸ்ட் ரூமில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஊழியர்களையும் துப்பாக்கியைக் காட்டி அமைதிப்படுத்தினர். அவர்களின் செல்போன்களையும் பறித்துக் கொண்டனர். பின்னர் அனைவரையும் ஒரு அறையில் போட்டுப் பூட்டினர். மேலாளரை மட்டும் தங்களுடன் வைத்துக்கொண்டு பணம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டக சாவியைக் கேட்டுள்ளனர். அதற்கு அவர், அந்த சாவி முதன்மை காஷியரிடம்தான் உள்ளது, அவர் சாப்பிடப் போயிருக்கிறார் என்றார்.

மேலும் கேஷ் கவுண்டரின் சாவியும் தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கொள்ளையர்கள் மேலாளரை தாக்கியுள்ளனர். பின்னர் உதவி மேலாளரை அழைத்து அவரிடம் இருந்த சாவி மூலம் பணம் வைக்கப்பட்டிருந்த கேஷ் கவுண்டரை திறக்கச் செய்தனர். பின்னர் அங்கிருந்த ரூ. 14 லட்சம் பணத்தை எடுத்து தாங்கள் கொண்டு வந்திருந்த பையில் போட்டனர். பின்னர் சண்முகசுந்தரத்தையும் அறையில் போட்டுப் பூட்டி விட்டு கிளம்பி விட்டனர்.

வங்கியை விட்டு வெளியே வந்த அவர்கள் படு சாவகாசமாக ரோட்டைக் கடந்து அங்கு நிறுத்தி வைக்கப்ப்ட்டிருந்த ஆம்னி வேனில் ஏறிப் போயுள்ளனர்.

இரண்டரை மணியளவில் சாப்பிடுவதற்காகப் போயிருந்த துப்புறவுத் தொழிலாளர் சாந்தி வங்கிக்குத் திரும்பி வந்தபோதுதான் கொள்ளைச் சம்பவம் தெரிய வந்தது. இதையடுத்து அறைக்குள் பூட்டப்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்தார்.

இதையடுத்து வங்கி மேலாளர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் விரைந்து வந்தனர்.

வழக்கம் போல இந்த வங்கிக் கொள்ளையிலும் இந்திக்காரர்களே ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் ஏற்கனவே பெருங்குடியில் நடந்த கொள்ளைக்கும், இந்தக் கொள்ளைக்கும் இடையே நிறைய ஒற்றுமைளும் உள்ளன.

அதேபோல இந்த வங்கியிலும் கண்காணிப்பு கேமரா இல்லை, காவலாளி இல்லை. இதுகுறித்து போலீஸார் பலமுறை வங்கிகளுக்கு அறிவுறுத்தியும் கூட அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கண்காணிப்பு கேமரா இல்லாததால், கொள்ளையடித்தவர்கள் யாரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கீழ்க்கட்டளையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மது அருந்துவதற்காக அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். அவர் கொள்ளையர்களைப் பார்த்துள்ளார். இதுகுறித்து கண்ணன் கூறுகையில்,

மதுபான பார் அருகே 4 பேர் முகத்தை மறைத்தபடி சென்றனர். அவர்களிடம் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இந்தியில் பதில் அளித்தபடி மாருதி காரில் ஏறிச் சென்றனர். மது அருந்திவிட்டு திரும்பி வந்தபோது போலீசார் நின்றனர். அதன்பிறகு தான் வங்கியில் கொள்ளை நடந்து இருப்பது எனக்கு தெரிய வந்தது என்றார்.

தற்போது அவர் சொன்ன அடையாளங்களை வைத்தும், ஊழியர்கள் சொன்ன அடையாளங்களை வைத்தும் கம்ப்யூட்டர் மூலம் படம் வரைந்து கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

வங்கியின் முதன்மை காஷியர் சாப்பிட வெளியே போயிருந்ததால் பாதுகாப்புப் பெட்டகத்தை திறக்கும் நிலை ஏற்படவில்லை. இல்லாவிட்டால் பெருமளவில் கொள்ளை போயிருக்கும்.

இந்த இரு சம்பவங்களுக்குப் பின்னராவது, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு வசதிகள் இல்லாத வங்கிகள் அதுகுறித்து தீவிர கவனம் செலுத்தினால் மக்களின் பணம் அநியாயமாக கொள்ளை போவதைத் தடுக்கலாம்.

Posted by:
English summary
North Indian thieves have looted a bank in Chennai for 2nd time in a month. Last month Bank of Baroda branch in Perungudi was looted. Yesterday the burglars entered into a IOB branch in Keelkattalai and took away Rs. 14 lakh cash at gun point.
User Comments
R KUMAR 21 Feb 2012 09:59 am
எல்லா வங்கிகளும்,வீடுகளும்,அலுவலகங்களும்,நிறுவனங்களும் பணம் செலவழித்து கேமராக்கள்,காவலாளிகள் வைத்து,வீட்டுக்குள் புகுந்து கொள்ளை அடிப்பவனை படம் பிடித்து இவன் தான் குற்றவாளி என்று காவல் துறையிடம் காட்டினால்,அவர்கள் அவனை நீதி மன்றத்துக்கு அழைத்து போய் ஒன்னு தண்டனை வாங்கி கொடுப்பார்கள்,அல்லது அவனிடம் பணத்தை வாங்கிகொண்டு விட்டு விடுவார்கள்.இது தான் காவல் துறையின் வேலையா.வாழப் பழத்தை உரிச்சு கொடுங்க சாப்புட்டு காட்டுறோம் அப்படிங்கிற மாதிரி இருக்கு.மலைய தூக்கி தலையில வைங்க போலிஸ் தூக்கி காட்டுவாங்க
R KUMAR 21 Feb 2012 10:04 am
அய்யா காவல் துறையே,உங்களுடைய முதன்மை பணி என்னவென்றால்,திருடர்கள்,கொலையாளிகள் உள்ளே வரவிடமால் தடுப்பது தான்.திருடோ,கொலையோ ,கொள்ளையோ நடக்கவிடாமல் தடுப்பது தான் முதன்மைப் பணி.அப்படி செய்தால் தான் அது நல்ல நிர்வாகம்,காவல் துறை நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம். .நடந்த பின் கண்டுபிடிப்பது என்பது இரண்டாம் பட்சம்.அது கண் இல்லாத கிழவி செய்யும் வேலைக்கு சமம்.
Ezhumalai PMP 21 Feb 2012 09:26 am
வடஇந்தியர்களை அதிக அளவில் குடியேற அனுமதிப்பது, தென்னகத்துக்கு நல்லதல்ல. வட இந்தியர்களின் ஒரே நோக்கமே தென்னிந்தியர்களை போண்டியாக்கிவிட்டு, பிச்சைக்காரர்களாக்குவதே. தமிழகத்தில் ஆங்காங்கு இருக்கும் மார்வாடிகள், அடகுபிடிப்பவர்களின் எண்ணமும் இதுவே. தங்கம் என்பது இந்து சமயத்தில் ஐஸ்வரியத்தின் அடையாளம் என்பதால், அடகு பிடிப்பதையே தொழிலாகக் கொண்டு, மக்களை ஒட்டாண்டிகளாக்கிவிட்டு சென்றுவிடுவர் இந்தக் கூட்டத்தினர். இவர்களுக்கும் கொள்ளைக்கார முகலாயர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
ar raman 21 Feb 2012 12:30 pm
எல்லா வங்கிகளும்,வீடுகளும்,அலுவலகங்களும்,நிறுவனங்களும் பணம் செலவழித்து கேமராக்கள்,காவலாளிகள் வைத்து,வீட்டுக்குள் புகுந்து கொள்ளை அடிப்பவனை படம் பிடித்து இவன் தான் குற்றவாளி என்று காவல் துறையிடம் காட்டினால்,அவர்கள் அவனை நீதி மன்றத்துக்கு அழைத்து போய் ஒன்னு தண்டனை வாங்கி கொடுப்பார்கள்,அல்லது அவனிடம் பணத்தை வாங்கிகொண்டு விட்டு விடுவார்கள்.இது தான் காவல் துறையின் வேலையா.வாழப் பழத்தை உரிச்சு கொடுங்க சாப்புட்டு காட்டுறோம் அப்படிங்கிற மாதிரி இருக்கு.மலைய தூக்கி தலையில வைங்க போலிஸ் தூக்கி காட்டுவாங்
கருநாக நிதி 21 Feb 2012 01:06 pm
Server busy. Please try again later. Thats tamil needs some repair.
புன்னகை மன்னன் 21 Feb 2012 02:21 pm
ங்கொக்கா.. மார்வாடிக்காரன் யாரு உன் கொப்பன் தானே? குஜராத் வளருதுன்னா எப்படி வளருது? உன் கொப்பன் மோடியை புகளுரப்போ அந்த பக்கம்? கொள்ளையை விமர்சிக்கிறப்போ இந்தப் பக்கமா? ந்கொம்மால இப்போ கூட கொள்ளைகள் அதிகம் நடக்குறதுக்கு உன் கொம்மாலை குத்தம் சொல்லாம பறி கொடுத்தவனை குத்தம் சொல்ற நீ எவ்வளவு பெரிய ஆரியத்திருடன்?
புன்னகை மன்னன் 21 Feb 2012 02:22 pm
ங்*கொ*க்கா.. மார்வாடிக்காரன் யாரு உன் கொ*ப்*பன் தானே? குஜராத் வளருதுன்னா எப்படி வளருது? உன் கொ*ப்*பன் மோடியை புகளுரப்போ அந்த பக்கம்? கொள்ளையை விமர்சிக்கிறப்போ இந்தப் பக்கமா? ங்*கொ*ம்*மா*ல இப்போ கூட கொள்ளைகள் அதிகம் நடக்குறதுக்கு உன் கொ*ம்*மா*லை குத்தம் சொல்லாம பறி கொடுத்தவனை குத்தம் சொல்ற நீ எவ்வளவு பெரிய ஆ*ரி*ய*த்*திருடன்?
புன்னகை மன்னன் 21 Feb 2012 02:26 pm
கொ*க்கா.. மார்வாடிக்காரன் யாரு உன் கொ*ப்*பன் தானே? குஜராத் வளருதுன்னா எப்படி வளருது? உன் கொ*ப்*பன் மோடியை புகளுரப்போ அந்த பக்கம்? கொள்ளையை விமர்சிக்கிறப்போ இந்தப் பக்கமா? கொ*ம்*மா*ல இப்போ கூட கொள்ளைகள் அதிகம் நடக்குறதுக்கு உன் கொ*ம்*மா*லை குத்தம் சொல்லாம பறி கொடுத்தவனை கு*த்*த*ம் சொல்ற நீ எவ்வளவு பெரிய ஆ*ரி*ய*த்*திருடன்?
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST