இந்திய குடியரசுத் தலைவர்களிலேயே மிகவும் கருணையானவர் பிரதீபா

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2012, 17:32 [IST]
 Pratibha Patil Most Merciful Presid Aid0128
டெல்லி: கடந்த 30 ஆண்டுகளாக இருந்த குடியரசுத் தலைவர்களிலேயே பிரதீபா பாட்டீல் தான் மிகவும் கருணை உள்ளம் படைத்தவராக உள்ளார். அவர் 23 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1981ம் ஆண்டில் இருந்து இதுவரை அளிக்கப்பட்ட கருணை மனுக்களில் 90 சதவீத மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தான் பரிசீலித்து தண்டனையைக் குறைத்துள்ளார். தன்னுடைய நலனுக்காக 9 வயது சிறுவனை பலி கொடுத்த ஜார்க்கண்டைச் சேர்ந்த சுஷில் மர்முவின் கருணை மனு கடந்த 2004ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தது. கடந்த 9ம் தேதி அந்த மனுவை பிரதீபா பாட்டீல் ஏற்றுக் கொண்டார் என்பது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 1981ம் ஆண்டு முதல் இதுவரை 91 குற்றவாளிகள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு கொடுத்துள்ளனர். அதில் 31 பேரின் மனுக்கள் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதில் 23 பேரின் மனுக்கள் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 18 மனுக்கள் நிலுவையில் உள்ளன. பிரதீபா இதுவரை 5 பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற 3 பேரின் மனுக்களும் அடக்கம்.
Posted by:
English summary
It seems Pratibha Patil is the most merciful president in the last 30 years. Since 1981, 31 mercy petitions were accepted out of which 23 were accpeted by Patil. She has rejected 5 mercy pleas including that of Rajiv Gandhi's three killers.
User Comments
First Namenatarajan Balakrishnan 23 Feb 2012 10:08 am
இந்த கிழவியின் புருஷன் ஒரு கூட்டுறவு வங்கியையே திவால் பண்ணி விட்டான் !
பெரிய பத்மநாபன் 22 Feb 2012 11:18 pm
இவரைப் போன்ற சுயநலவாதியும், பொறுப்பில்லாதவரும் இந்தியாவிற்கு குடியரசு தலைவராக பதவி வகித்தது இந்த நாட்டின் சாபக்கேடுதான். அப்துல்கலாம் இருந்த இடத்தில் இவரா... நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. ஆனால் என்ன செய்வது இந்தியர்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கவில்லை இந்த பொம்மை... வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதிலேயே மொத்த பதவிகாலத்தையும் முடித்து விட்டார். ஆனால் தமிழர்களின் கருணை மனுவை நிராகரித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. வரலாறு இவர்களை மன்னிக்காது. இந்த துரோகிகளின் ஆட்சியில் இருப்பதை நினைத்தால் வெட்கம்
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST