சங்கரன்கோவில் செல்லத் தயாராகிறார் ஜெயலலிதா... கிராமம் கிராமமாக போக திட்டம்

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2012, 15:55 [IST]
 Jaya May Dash Sankarankovil On March 12 Aid0091
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் சங்கரன்கோவில் பிரசாரத் திட்டம் கிட்டத்தட்ட தயாராகி விட்டது. மார்ச் 2வது வாரத்தில் முதல்வர் சங்கரன்கோவிலில் சுற்றுப்பயணம் செய்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

சங்கரன்கோவிலுக்கு மார்ச் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் முத்துச்செல்வி, திமுக சார்பில் ஜவஹர் சூரியக்குமார், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், தேமுதிக சார்பில் முத்துக்குமார் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாமக ஆகியவை போட்டியிடாமல் விலகி ஓடி விட்டன. பாஜக தனது வேட்பாளரை நிறுத்தும் என்று தெரிகிறது. பிற கட்சிகளின் நிலை தெளிவாக இல்லை.

அதிமுக ஏற்கனவே தனது பணிகளைத் தொடங்கி ஒரு கட்டத்தை முடித்து விட்டது. நாளை வேட்பாளர் முத்துச்செல்வி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். ஏற்கனவே இவர் பிரசாரத்தையும் தொடங்கி விட்டார்.

32 அமைச்சர்கள் உள்பட 43 பேர் கொண்ட மெகா தேர்தல் பணிக்குழுவை முதல்வர் ஜெயலலிதா நியமித்து அவர்களும் பணியில் இறங்கி விட்டனர். முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி வரை சற்று மந்த நிலைதான் காணப்படும். முதல்வரின் பிறந்த நாளுக்குப் பிறகுதான் தொகுதியில் அதிமுகவினர் முழு வீச்சில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.

மார்ச் 2வது வாரத்தில் ஜெயலலிதா பிரசாரத்திற்கு வரவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அவர் மார்ச் மத்தியில் அதாவது 12 அல்லது 13ம் தேதி சங்கரன்கோவில் போவார் என்று தெரிகிறது. கிராமம் கிராமமாக அவர் சென்று பிரசாரம் செய்யவுள்ளதாகவும் பேசப்படுகிறது.

திமுக தரப்பில் அதன் சூப்பர் ஸ்டாரான தலைவர் கருணாநிதி மார்ச் 15ம் தேதி பிரசாரம் செய்கிறார். அதேபோல மு.க.ஸ்டாலின், அன்பழகன் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்யவுள்ளனர். பிரசார பணிகளை மு.க.அழகிரி தலைமையில் திமுகவினர் மேற்கொள்கின்றனர்.

மதிமுக தரப்பி்ல் வைகோ ஏற்கனவே புயல் வேகத்தில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். விஜயகாந்த்தும் விரைவில் பிரசாரத்தில் குதிக்கவுள்ளார். கூடவே பிரமேலதாவும் பிரசாரத்திற்கு வரவுள்ளார்.

மொத்தத்தில் மார்ச் மாத மத்தியில் சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரக் களம் படு சூடாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Posted by:
English summary
Chief Minister Jayalalitha may hit Sankarankovil by poll campaign on March 12, sources say. DMK president Karunanidhi is slated for campaign on March 15, it is noted.
User Comments
sharmilagopu 22 Feb 2012 11:28 pm
சங்கரன் கோயிலில் சங்கரா சங்கரா!! போட்டாலும் அம்மாவிற்கு இந்த முறை கோவிந்தா கோவிந்தா தான் .
நக்கீரன் 22 Feb 2012 10:07 pm
ஒரு மாநில முதல்வர் ஓர் இடைத்தேர்தலில் நேரடியாகப் பரப்புரை செய்வதும் தனது அமைச்சர் பட்டாளங்களை சங்கரன் கோயிலில் மாதக் கணக்காக கூடாரம் அடித்து இருக்கச் செய்வதும் நாட்டுக்கு நல்லதல்ல. இந்த இடைத் தேர்தலில் ஆளும் அதிமுக படுத்துக் கொண்டே வென்றிருக்க வேண்டும். அப்படியில்லாது கோடிக்கணக்கில் பணம் செலவழித்து பல சலுகைகளை அறிவித்து, பல இலவசங்களை வழங்கி வெற்றிபெறுவது ஒரு வெற்றியல்ல. இதையெல்லாம் முதல்வருக்கு யார் எடுத்துச் சொல்வது?
NALAM VIRUMBI 22 Feb 2012 06:22 pm
இதை பார்த்தால் எல்லா தொகுதிகளுக்கும் மாறி மாறி இடை தேர்தல் செய்யல்லாம் போலிருக்கு. அப்படியாவது நம்ம மக்களுக்கு சுமாரான வசதிகள் கிடைக்குமோ என்னவோ
R KUMAR 22 Feb 2012 04:16 pm
தானே புயல் நிவாரணத்துக்காக மக்களிடம் தானே பிச்சை எடுத்தார்,இப்பொழுது அரசியல் வாழ்க்கையில் தன்னை பாதுகாத்து கொள்ள தானே மக்களிடம் ஒட்டு பிச்சை எடுக்க போகிறார்.மக்கள் மரியாதை கொடுத்து ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார்கள்.அதில் திறமையாக,பொறுப்பாக,நிர்வாகம் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்து இருந்தால் இப்படி பயந்து போய் மக்களிடம் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.இந்த எட்டு மாதத்தில் ஆளும் திறமையை காட்டி,மக்களிடம் நல்ல பேர் வாங்கி உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கவேண்டும்
R KUMAR 22 Feb 2012 04:17 pm
எம்.ஜி.ஆர் பொதுத்தேர்தலில் படுத்து கொண்டே ஜெயித்தார்.ஆனால் தற்பொழுது அதிமுக ஆட்சியில் இருந்து கொண்டு கிராமம் கிராமமே போய் கெஞ்சி கூத்தாடி ஒட்டு பிச்சை எடுத்து ஜெயிக்க வேண்டி இருக்கிறது.
Nadodi Mannan 22 Feb 2012 04:46 pm
அப்படியாவது எல்லா கிராமத்துக்கும் சாலை வசதி கிடைக்கட்டும்...........!
babu 22 Feb 2012 10:39 pm
ஜெயாவுக்கு ஓட்டு போட்ட முட்டால் தமிழனே நீ திருந்தவே மாட்டாய்
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST