கரூர்: மின்வெட்டைக் கண்டித்து, மின் கம்பிகளில் துணி காய வைக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக கரூர் மாவட்ட பாமக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன் கூறுகையில்,
தொடர் மின்வெட்டினால், மக்கள் மீளாத்துயருக்குள்ளாகியுள்ளனர். தொழிற்சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பால், பஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்த்தியுள்ள நிலையில், தொடர் மின்வெட்டினாலும் மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இதற்கு தீர்வு காண வேண்டும், இல்லையெனில், கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்களின் அனுமதிப் பெற்று, கரூர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள மின்கம்பிகளில் துணிகாய வைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.