சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்குப் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று காலை 6 மணி அளவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு இருதய பரிசோதனை செய்யப்பட்டது. ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அண்மையில் தான் ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று காலை 6 மணி அளவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு இருதய பரிசோதனை செய்யப்பட்டது. ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
Read: In English
அதன் பின்னர் சற்று நேரத்திற்கு முன்பு ஸ்டாலின் வீடு திரும்பினார். முன்னதாக ஸ்டாலின் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும், ஏராளமான திமுகவினர் மருத்துவமனை வளாகம் முன்பு குவிந்து விட்டனர்.அண்மையில் தான் ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.