எங்க வீட்டுக்கு வந்து கூட்டணிக்காக காத்திருந்த 3 அமைச்சர்கள்-பிரேமலதா 'குண்டு'!

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2012, 8:34 [IST]
 Premalatha Vijayakanth Slams Both Admk And Dmk Aid0091
சென்னை: கூட்டணிக்காக எங்கள் வீட்டுக்கு வந்து மூன்று அதிமுக நிர்வாகிகள் காத்திருந்தனர். அவர்கள் இப்போது அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

நேற்று நடந்த தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் வழக்கம் போல உச்சஸ்தாணியில் கோபாவேசமாக பேசினார். நரம்பு புடைக்க அவர் பேசிய பேச்சின்போது அதிமுகவையும், திமுகவையும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்தார்.

அவர் பேசுகையில்,

எல்லா இடைத் தேர்தலையும் தே.மு.தி.க. சந்தித்து வருகிறது. ஆனால் 5 ஆண்டுகளாக இடைத் தேர்தலையே சந்திக்காதவர்கள்தான் நம்மைப் பார்த்து திராணி இருக்கிறதா என்று கேட்கின்றனர்.

தே.மு.தி.க.வோடு கூட்டணி அமைப்பதற்காக அ.தி.மு.க.வின் மூன்று முக்கிய நிர்வாகிகள், இப்போது அமைச்சர்களாக இருப்பவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து காத்திருந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய முழு விவரத்தையும் பதிவு செய்து உள்ளோம். தேவைப்படும்போது அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

தே.மு.தி.க. போன்று எதையும் தைரியமாகச் சந்திக்கக்கூடிய கட்சி தமிழகத்தில் இல்லை.

முன்பு நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தேர்தலின் போதெல்லாம் தி.மு.க. இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று சவாலாகப் பேசி வந்தவர் மு.க.அழகிரி. இப்போது வாக்கு வித்தியாசத்தைப் பற்றிப் பேசாமல் வெற்றி பெறுவோம் என்று மட்டும் கூறுகிறார்.

தே.மு.தி.க.வுக்காக எங்களின் பல்வேறு சொத்துகளை இழந்துதான் போராடி வருகிறோம். அது எங்களுக்குப் பெரிது இல்லை. எத்தனை இழந்தாலும் வெற்றியை நோக்கி போராடுவோம்.

ராமுவசந்தன் மகன் திருமணத்துக்காக மார்ச் 11-ம் தேதி மதுரைக்கு வருகிறோம். அன்று முதல் நானும் விஜயகாந்தும் பிரசாரம் செய்ய உள்ளோம். அனைத்து மாவட்டத் தே.மு.தி.க.வினரும் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தது 10 வாக்குகள் சேகரித்தாலே போதும். நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர் பேசியதாக பேச்சைக் கேட்டவர்கள் தெரிவித்தனர்.
Posted by:
English summary
Premalatha VIjayakanth's speech was the highlight in the DMDK's general council meeting held yesterday in Chennai. She slammed both ADMK and DMK.
User Comments
horlicks thirudan 22 Feb 2012 11:20 pm
அது வேறு யாருமல்ல, கரிநாய்நிதி, ஹோர்லிக்ஸ் திருடன் அழகிரி, சோணங்கி சுப்பன் ஸ்டாலின். இந்த மூணு பேரும்தான்.
Anbuchelian Raman 22 Feb 2012 10:42 pm
யாரு இவ?
Ganesan Venkataraman 22 Feb 2012 09:15 pm
இவனெல்லாம் ஒரு தலைவன். இவன் துணைவி சேலை கட்டிய பிசாசு. நாட்டை ஆளனுமாம், ஆசை இருக்கு ராஜ்ஜியம் ஆள, தகுதி இருக்கு புண்ணாக்கு தின்ன!
சென்னைவாசி 22 Feb 2012 06:27 pm
2011க்கு முன் நடந்த தேர்தலில் விசியகாந்த்தும் இப்படி தான், என்னிடம் காசு கொடுத்து கூட்டணிக்கு கூப்பிடுறாங்கன்னு சொன்னார், யாருன்னு இதுவரை சொல்ல தைரியம் இல்லை.
TAMIZHAN AADHAVAN 22 Feb 2012 03:19 pm
அக்கட ச்சூடு.....! அவருதான் எப்பவும் மப்புலே மிதக்கிறார், அப்புறம்.....?
Nadodi Mannan 22 Feb 2012 10:36 am
"அன்று முதல் நானும் விஜயகாந்தும் பிரசாரம் செய்ய உள்ளோம்." விஜயகாந்த் என்ன பிரேமலதாவோட தம்பியா?
R KUMAR 22 Feb 2012 10:34 am
இருட்டுக்குள் அடைபட்டு கிடந்த அதிமுக என்ற ஒரு சிலைக்கு மக்களிடம் தன அழகை காட்டிக்கொள்ள தேமுதிக என்ற ஒரு டார்ச் லைட் தேவைப்பட்டது.டார்ச் லைட்டும் உதவியது .சிலையும் வெளிச்சத்துக்கு வந்தது.டார்ச் லைட் வெளிச்சத்தில் மக்களும் அந்த சிலை அழகாக இருக்கிறது என்று நினைத்தார்கள்.சிலையை பார்த்து மகிழ்ந்தார்கள்.சிலையும் டார்ச் லைட்டை அலட்சியம் செய்தது .ஆனால் நாட்கள் ஆக ஆக உதய சூரிய வெளிச்சத்தில் ப்பூ இந்த சிலையின் அழகு இவ்வளவு தானா என்று மக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.இது தான் உண்மை.
R KUMAR 22 Feb 2012 11:13 am
கேப்டன் அவர்களே,நீங்கள் இருட்டுக்குள் இருந்த சிலைக்கு வெளிச்சம் காட்ட உதவிய சின்ன டார்ச் லைட்டு தான்.புதிதாக வந்த மக்களும் அந்த சிலை ஏதோ பிரமாண்டமாக இருக்கும்,சிறப்பாக இருக்கும்,பொன்னாக இருக்கும் என்று நினைத்தார்கள்.சிலையும் வெளிச்சத்துக்க வந்தது ,பார்பதற்கும பொன் கலரில் தான் இருந்தது.நாட்கள் ஆக ஆக சூரிய வெளிச்சத்தில் அது பொன் சிலை அல்ல ,மண் சிலை தான்..டார்ச் வெளிச்சத்தில் அது மஞ்சளாக இருந்ததை பார்த்து ஏமாந்து விட்டோம் என்று மக்கள் புலம்புகிராகள்..அந்த டார்ச் லைட்டு மீதும் கோபமாக இருக்கிறார்கள்
horlicks thirudan 22 Feb 2012 11:19 pm
கருப்பனை பகலில் டார்ச்ச் லைட் அடித்து பார்த்தாலும் தெரியாது!
Nadodi Mannan 22 Feb 2012 10:32 am
அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை .....மட்டும்..... உரிய நேரத்தில் வெளியிடுவோம். மற்றவற்றை வெளியிடமாட்டோம்.
Komberi Mookan 22 Feb 2012 10:24 am
ஏம்மா பிரேமா .... அடுத்தமுறை நாம்தான் வரோமா .... அட ராமா .... இத சொல்ல உனகில்ல ஷேமா .... பொண்ணுன்னா இருக்கணும் காமா .....
First Namenatarajan Balakrishnan 22 Feb 2012 10:03 am
பிரேமா பகலில் சரக்கு அடித்துவிட்டு வாயுக்கு வந்த மாதிரி மூன்று மந்திரிமார்கள் வந்து காத்திருந்தார்கள் என்ற உண்மையை சொன்னார் ,நிஜம் ஆனால் எதற்க்கஹா காதிருதார்கள் என்று சொல்லவில்லை !
TAMIZHAN AADHAVAN 22 Feb 2012 03:13 pm
அக்கட ச்சூடு.....! அவருதான் எப்பவும் மப்புலே மிதக்கிறார், அப்புறம்.....?
TAMIZHAN AADHAVAN 22 Feb 2012 03:14 pm
அக்கட ச்சூடு.....! அவருதான் எப்பவும் மப்புலே மிதக்கிறார், அப்புறம்.....?
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST