நேற்று ஒன்று, இன்று 29, நாளை நமது ஆட்சி-விஜயகாந்த் முழக்கம்

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2012, 8:29 [IST]
 Vijayakanth Sees Secret Alliance Aid0091
சென்னை: எனது கட்சித் தொண்டர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களைப் போன்றவர்கள். ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர்போனவர்கள். 2016-ல் எங்கள் ஆட்சி அமைவது உறுதி. நேற்று ஒரு எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.க்கள், நாளை ஆட்சி நமதே என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

சென்னையில் நேற்று நடந்த தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்றன. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக உள்ளது முதல்வர் ஜெயலலிதாவின் போக்கு. இடிந்தகரையில் 100 நாள்களாகப் போராடி வரும் மக்களை ஜெயலலிதா சந்திக்காதது ஏன்? அப்பகுதியில் பல்வேறு சட்ட விரோதச் செயல்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதில் சதி உள்ளதோ என சந்தேகப்படுகிறேன்.

நிலப் பறிப்பு பிரச்னையில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ரகசிய கூட்டணி வைத்துள்ளன. நிலப் பறிப்பு புகார் தொடர்பாக தி.மு.க.வினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உள்ளே தள்ளப்பட்ட அதேவேகத்தில் சிறையிலிருந்து விடுதலையாகி வருகின்றனர். இதில், ஜெயலலிதாவுக்கு சட்டம் தெரியவில்லையா அல்லது போலீஸாருக்கு சட்டம் தெரியவில்லையா என்பது புரியவில்லை. இந்த விஷயத்தில் இரு கட்சிகளுக்கும் ரகசிய கூட்டணி உள்ளதாக சந்தேகப்படுகிறேன்.

சட்டப் பேரவையில் கையை நீட்டக் கூடாது எனச் சொல்கிறார்கள். அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா? ஏதாவது காரணம் சொல்லி என் பேச்சுக்குத் தடை விதிக்க முயற்சி நடக்கிறது. சட்டமன்றத்தில் தடை விதித்தால் என்ன, மக்கள் மன்றத்தில் இந்த ஆட்சியின் தவறுகளை எடுத்துச் சொல்லுவேன். சட்டப் பேரவையில் எனக்குத் தடை விதித்தது தவறான முன்னுதாரணம். சட்டப் பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.

இலவச கிரைண்டர், மிக்ஸி, மின் விசிறி கொடுத்து என்ன பயன்? மின்சாரம் இல்லாவிட்டால் இந்த இலவசங்கள் எல்லாம் வீண். எல்லாப் பிரச்னைகளுக்கும் கடந்த ஆட்சியே காரணம் என தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி மக்களை ஏமாற்றி வருகின்றன. 1991-ல் இருந்து இதே பல்லவியைத்தான் பாடி வருகின்றனர். எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு புதிய மின் திட்டங்களை உருவாக்காமல் இரு கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருகின்றன.

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கடந்த 9 மாதங்களில் 5 லட்சம் பேர் வேலை கேட்டு, வேலை வாய்ப்பு அலுவலகங்ளில் பதிவு செய்துள்ளனர். இலவசமாக அது, இது என கொடுப்பதை விட்டு, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.

கடந்த தேர்தலில் பதவி ஆசைக்காக நான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரவில்லை. மக்கள் விரோத தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம். கூட்டணி சேராவிட்டால் பணம் வாங்கிக் ண்டு கூட்டணி சேரவில்லை என்பார்கள்.

எனது கட்சித் தொண்டர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களைப் போன்றவர்கள். ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர்போனவர்கள். 2016-ல் எங்கள் ஆட்சி அமைவது உறுதி. நேற்று ஒரு எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.க்கள், நாளை ஆட்சி நமதே என்றார் விஜயகாந்த்.
Posted by:
English summary
DMDK leader VIjayakanth slammed both DMK and ADMK and said that there is a secret pact between the two parties.
User Comments
TAMIZHAN AADHAVAN 22 Feb 2012 02:59 pm
டவுசர்தாசுக்கு சரியான போட்டி !
R KUMAR 22 Feb 2012 10:37 am
இருட்டுக்குள் அடைபட்டு கிடந்த அதிமுக என்ற ஒரு சிலைக்கு மக்களிடம் தன அழகை காட்டிக்கொள்ள தேமுதிக என்ற ஒரு டார்ச் லைட் தேவைப்பட்டது.டார்ச் லைட்டும் உதவியது .சிலையும் வெளிச்சத்துக்கு வந்தது.டார்ச் லைட் வெளிச்சத்தில் மக்களும் அந்த சிலை அழகாக இருக்கிறது என்று நினைத்தார்கள்.சிலையை பார்த்து மகிழ்ந்தார்கள்.சிலையும் டார்ச் லைட்டை அலட்சியம் செய்தது .ஆனால் நாட்கள் ஆக ஆக உதய சூரிய வெளிச்சத்தில் ப்பூ இந்த சிலையின் அழகு இவ்வளவு தானா என்று மக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.இது தான் உண்மை.
R KUMAR 22 Feb 2012 10:57 am
கேப்டன் அவர்களே,நீங்கள் இருட்டுக்குள் இருந்த சிலைக்கு வெளிச்சம் காட்ட உதவிய சின்ன டார்ச் லைட்டு தான்.புதிதாக வந்த மக்களும் அந்த சிலை ஏதோ பிரமாண்டமாக இருக்கும்,சிறப்பாக இருக்கும்,பொன்னாக இருக்கும் என்று நினைத்தார்கள்.சிலையும் வெளிச்சத்துக்க வந்தது ,பார்பதற்கும பொன் கலரில் தான் இருந்தது.நாட்கள் ஆக ஆக சூரிய வெளிச்சத்தில் அது பொன் சிலை அல்ல ,மண் சிலை தான்..டார்ச் வெளிச்சத்தில் அது மஞ்சளாக இருந்ததை பார்த்து ஏமாந்து விட்டோம் என்று மக்கள் புலம்புகிராகள்..அந்த டார்ச் லைட்டு மீதும் கோபமாக இருக்கிறார்கள்
kalnaayak 22 Feb 2012 05:46 pm
மிகவும் அருமையான கருத்து.
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST