கொள்ளையர் தலைவனுக்கு 'பேனர்' கட்டுவதற்குள் சுட்டு வீழ்த்திய போலீஸ்!

வியாழக்கிழமை, பிப்ரவரி 23, 2012, 10:45 [IST]
 Chennai Police Planned Put Up Digital Banner Aid0091
சென்னை: சென்னை வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலின் தலைவனாக செயல்பட்ட வினோத்குமாரின் உருவப் படத்தை பிளக்ஸ் போர்டு மூலம் அனைத்து வங்கிகள் முன்பும் பேனர் போல வைப்பதற்கு காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள்ளாகவே அவன் சிக்கி செத்துப் போய் விட்டான்.

சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா, கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் கிளைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கும்பலைப் பிடிக்க சென்னை போலீஸார் 40 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில்தான் இன்னொரு வங்கியின் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினான் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனும், முன்னாள் பொறியியல் மாணவனுமான வினோத்குமார்.

அந்த வீடியோ பதிவில் இருந்த வினோத்குமாரின் படத்தை பிரிண்ட் போட்ட போலீஸார் நேற்றுதான் பத்திரிக்கையாளர்கள் மூலம் மக்கள் பார்வைக்கு விட்டனர். மேலும், வினோத்குமாரின் படத்தை பிளக்ஸ் போர்டு மற்றும் டிஜிட்டல் பேனர்கள் மூலம் பெரிதாக பிரசுரித்து அதை சென்னையில் உள்ள வங்கிகள் முன்பு வைத்து பொதுமக்களிடமிருந்து தகவலைப் பெறவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக கிட்டத்தட்ட ஆயிரம் டிஜிட்டல் பேனர்களுக்கு ஆர்டரும் கொடுத்திருந்தனராம். மேலும் வங்கிகள் முன்பு வைக்க அனுமதியும் பெறப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாகவே வினோத்குமாரும், அவனது கும்பலைச் சேர்ந்தவர்களும் போலீஸாரிடம் சிக்கி கொல்லப்பட்டு விட்டனர்.

ஒருவேளை டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்ட முதல் கொள்ளைக் கூட்டத் தலைவன் என்ற பெயர் வினோத்குமாருக்குக் கிடைத்திருக்கும்.
Posted by:
English summary
Chennai police had planned to put up digital banners in front of all banks in the city to seek information about the gand leader Vinodh Kumar. But he was caught and killed in encounter today.
User Comments
Soriyar soriyar 24 Feb 2012 09:45 am
ஐநூறு மீனவர்களை கொன்ற சிங்கள வெறியர்கள் இது போல என்கவுண்டர் செய்ய தில் இருக்கா?
Enna Ithu 24 Feb 2012 06:12 am
போங்கசார்... நான் ரசிகர்மன்றமே ஆரம்பிச்சிருப்பேன்.
Anantha 23 Feb 2012 08:23 pm
"ஒருவேளை டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்ட முதல் கொள்ளைக் கூட்டத் தலைவன் என்ற பெயர் வினோத்குமாருக்குக் கிடைத்திருக்கும்." - ரொம்ப முக்கியம்
vasanth 23 Feb 2012 04:17 pm
டிஜிட்டல் பண்ணேர் அடிச்சு போலீஸ் காரன் கொள்ளை அடிசுருபாங்க நல்லவேளை அதுக்குள்ள அவனே வந்து மாட்டிகிட்டான்.... ;)
Soriyar soriyar 23 Feb 2012 01:49 pm
ஐநூறு மீனவர்களை கொன்ற சிங்கள வெறியர்கள் இது போல என்கவுண்டர் செய்ய டில் இருக்கா?
Soriyar soriyar 23 Feb 2012 01:44 pm
சங்கர்கொவில் இடைதேர்தலில் மின்வெட்டு பிரச்னையை பூசு மொழுக என்ன வழி?நாலு பேரை கட்டிபோட்டு சுட்டுவிட்டு அவர்கள் எங்களை சுட பார்த்தார்கள் என அளப்பது!அந்த கட்ட மீச விஷய குமார் அதான செஞ்சான்!
R KUMAR 23 Feb 2012 12:34 pm
இந்த கொல்லைகார்ரர்கள் மீது ஏற்கனே ஏதாவது காவல் நிலையத்தில் வேறு எதவாது வழக்குகள் பதிவாகி இருக்கிறதா.இந்த புகைப்படம் வந்தபின் ,எதாவது பழைய போலிஸ் கேஸில் இந்த போட்டா இருக்கிறதா,இவர்கள் வங்கியில் பணத்தை மட்டும் தான் கொள்ளை அடித்தார்கள்,கொலை எதுவும் செய்ததாக தெரியவில்லை.இதற்கு முன்னாலும் வேறு எதுவும் கொலை,கொள்ளை செய்தார்களா என்றும தெரியவில்லை.அதற்குள்ளாக ஒரு சாட்சி கூட இல்லாமல் எல்லாவற்றையும் அழித்து விட்டது இந்த தமிழ போலிஸ்.இது தமிழக காவல்துறையின் புத்திசாலியின்மையை காட்டிகிறது. .
R KUMAR 23 Feb 2012 12:40 pm
ஹலோ,ரூட் காஸ் என்னன்னு தெரியாம, அவசரமா பிரச்சனையை முடிப்பது நல்ல புத்திசாலித்தனம் அல்ல
Soriyar soriyar 23 Feb 2012 01:43 pm
அட சங்கரன் கோவில் இடைதேர்தல்தான் கரணம்!
GIRIVASAN 23 Feb 2012 12:17 pm
நல்லது நடந்தது வாழ்த்துக்கள் காவல் துறைக்கு
GIRIVASAN 23 Feb 2012 12:16 pm
நல்லது நடந்தது .
Ramesh 23 Feb 2012 12:15 pm
மொத்தம் 35 லட்சம் அடிச்சவங்கள என்கௌன்ட்டர்ல போட்டாச்சு , 1700000000000 கோடி அடிச்ச கும்பல என்ன செய்ய போறீங்க?
பாரூக் திருத்துறைபூண்டி 23 Feb 2012 01:25 pm
லட்சத்துல அடிச்சவங்க கொள்ளையர்கள்! அப்ப கோடில அடிக்குரவங்க யாரு? என்ன செய்ய போகுது?
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST