For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் 365 நாட்களில் 356 சிறுத்தைகள் பலி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 356 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன. இவற்றில் 52 விழுக்காடு வேட்டைக்காக கொல்லப்பட்டுள்ளன.

வனவிலங்குகள் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007-ம் ஆண்டில் 126

2008-ம் ஆண்டில் 161

2009-ம் ஆண்டில் 180

2010-ம் ஆண்டில் 180 என்றுதான் சிறுத்தைகள் எண்ணிக்கை இருந்தது.

2011-ம் ஆண்டிலோ அப்படியே இரண்டு மடங்காகி புலிகளைப் போல் அழிவின் விளிம்பில் இருக்கக் கூடிய ஒரு இனமாக சிறுத்தைகளை மாற்றிவிட்டனர்.

நாக்பூர் முதலிடம்

நாக்பூர் வனப்பகுதியில் மட்டும் 81 சிறுத்தைகள் இறந்திருக்கின்றன.

2010-ம் ஆண்டில் தே வனப்பகுதியில் 56ம், 2009ல் 48 சிறுத்தைகளும் உயிரிழந்திருக்கின்றன.

இந்த வனப்பகுதியில் பெருமளவில் சிறுத்தைகள் வேட்டையாடப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு உயிரிழந்த சிறுத்தைகளில் மனிதர்களால் 41 விழுக்காடு சிறுத்தைகளும் விபத்துகளால் 8 விழுக்காடு சிறுத்தைகளும் உயிரிழந்திருக்கின்றன.

ஆபத்துகளில் சிக்கிக் கொண்ட நிலையில் மீட்கப்படும்போது 14 சிறுத்தைகள் உயிரிழந்திருக்கின்றன.

இருப்பினும் உத்தர்காண்ட் மாநிலத்தில்தான் 114 சிறுத்தைகள் கடந்த ஆண்டு இறந்திருக்கின்றன.

English summary
Wildlife Protection Society of India report for 2011 shows 356 deaths in 365 days; poaching behind 52% of fatalities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X