For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் ஊருக்கு வந்து என்னைய கேட்க நீ யாரு?- விஜயகாந்துக்கு 'டோஸ்' விட்ட விவசாயி!

By Siva
Google Oneindia Tamil News

Vijayakanth
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் பிரச்சாரத்தின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும், விவசாயி ஒருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முத்துகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட கடையாலுருட்டி என்ற கிராமத்தில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், தற்போதே அதிக அளவு மின்வெட்டு உள்ளது. இதில் இடைத்தேர்தல் முடிந்த பிறகும் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் என்றார்.

அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த கிராமவாசி ஒருவர், மின்சாரம் இருக்கிறது என்பதால் தானே நீங்க பேசுகிறீங்க என்றார். இதனால் கடுப்பாகிய விஜயகாந்த் யார் நீங்க என்று அந்த விவசாயியைப் பார்த்து கேட்க அவர் பதிலுக்கு எங்க ஊருக்கு வந்துவிட்டு என்னை கேட்க நீங்க யார்? என்று பதில் கேள்வி கேட்டார். கோபத்தில் விஜயகாந்த் மேலே வா சொல்றேன் என்று கூற நீ கீழே வா என்று பதிலுக்கு விவசாயி வாரினார்.

இப்படி இருவரும் ஏட்டிக்குப்போட்டியாகப் பேச வாக்குவாதம் முற்றியது. இதைப் பார்த்த போலீசார் அந்த விவசாயியை சமாதானப்படுத்தினர். உடனே தேமுதிகவினர் போலீசாரை முற்றுகையிட்டு, நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். முதல்வர் வரும்போது நாங்களும் பதிலுக்கு ஏதாவது செய்வோம் என்றனர்.

அந்த விவசாயி எந்த கட்சியையும் சேர்ந்தவர் அல்ல என்று கூறி தேமுதிகவினரை போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து விஜயகாந்த் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வேறு பகுதிக்குச் சென்றார்.

English summary
While DMDK chief Vijayakanth was campaigning in Sankarankovil, a farmer irritated him. Both of them had a heated argument in front of the voters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X