For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்: பரபரப்பான வாக்குப்பதிவு- வாக்காளர்கள் ஆர்வம்!

By Shankar
Google Oneindia Tamil News

Voters
சங்கரன்கோயில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பெரும் பரபரப்பாக வாக்குப் பதிவு நடந்து வருகிறது. பிற்பகல் 12 மணிக்குள் 40 சதவீத வாக்குப் பதிவு முடிந்துவிட்டது.

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிடுகிறார்கள்.

காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி, காலையிலேயே தனது வாக்கைப் பதிவு செய்தார். தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார், பா.ஜ.க. வேட்பாளர் முருகன், சமாஜ்வாடி கட்சி சார்பில் சயேட் சையாக போட்டியிடும் நாகேஸ்வரராவ், காந்திய சிந்தனையாளர் மன்றம் சார்பில் போட்டியிடும் ஆறுமுகம், இந்திய ஜனநாயக குடியரசு கட்சி கணேசன் ஆகிய 5 வேட்பாளர்களுக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் ஓட்டு இல்லை.

158 புகார்கள்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை 158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பார்வையாளர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

கலிங்கப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியை பார்வையிட அவர் போது, அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே என நிருபர்கள் ‌கேட்டதற்கு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்றார்.

English summary
According election commission reports, there is 40 percent polling completed in Sankarankovil till the afternoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X