For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்ச் 26-ல் தமிழக பட்ஜெட்... மக்களுக்கு ஏதாவது 'தேறுமா'?

By Shankar
Google Oneindia Tamil News

St George Fort
சென்னை: மார்ச் 26-ம் தேதி 2012-13-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.

ஜெயலலிதா அரசு பதவி ஏற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முழுமையான முதல் பட்ஜெட் இது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற மார்ச். 26-ந் தேதி தொடங்கி ஒரு மாத காலம் வரை நடைபெற உள்ளது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தின் 2012-2013-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச்.26-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்வார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா அரசு பதவி ஏற்றபோது ஏராளமான திட்டங்கள், சலுகைகள், இலவசங்களை அறிவித்தார். ஆனால் இந்த ஓராண்டு காலத்தில் அவற்றில் ஒன்றைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை.

அறிவிக்கப்பட்ட இலவசங்களில் பல பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. இலவச அரிசி விநியோகிக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆவதாக வட மாவட்டங்களில் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. ஒரு நாளின் பாதி அளவுக்கு மின்வெட்டு என்றாகிவிட்டது.

ஜெயலலிதாவின் உத்தரவு முழுமையாக அமலுக்கு வருவது டாஸ்மாக் விஷயத்தில் மட்டும்தான் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டு உண்மை என்கிற அளவுக்குதான் நிலைமை உள்ளது.

ஜெயலலிதா பதவி ஏற்ற பிறகு கடும் விலை உயர்வுப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு எந்த வகையிலாவது விடிவு தருமா இந்த பட்ஜெட்? பார்க்கலாம்!

English summary
The Jayalalithaa govt will submit its first full fledged budget on March 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X