For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லைப் பகுதியில் போர் விமானங்களுடன் சீனா திடீர் ராணுவ பயிற்சி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய எல்லைப் பகுதி அருகே அமைந்துள்ள கிங்காய்-திபெத் பீடபூமி பகுதியில் சீனா மிகப் பெரிய அளவில் ராணுவப் பயிற்சி மேற்கொண்டுள்ளது. இதில் முதல்முறையாக சீனாவின் சொந்த தயாரிப்பான ஜே-10 ரக போர் விமானங்களும் இடம் பெற்றன.

3,500 மீட்டர் உயரமுள்ள இந்தப் பகுதியில் தரைப்பகுதிகளை தாக்கும் வகையிலான பயிற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டது. மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் இப்பகுதியில் ஜே-10 ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டதற்கான செய்தியையும், படங்களையும் சீன ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஜே-10 விமானங்களில் வழக்கமான விமானப் படை குண்டுகளும், லேசர் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. இது போன்ற ராணுவப் பயிற்சி குறித்த தகவல்களை சீனா வெளியிடுவதில்லை. எனினும் இந்த முறை அவ்வாறு வெளியிட்டுள்ளது, இந்தியாவுக்காக சொல்லப்படும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் போர் விமானங்களை நிறுத்தி, பாதுகாப்பை பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
China is back to flexing its muscles close to the Indian border. The People's Liberation Army has conducted a major "live fire" exercise, testing its multi-role J-10 fighters armed with laser-guided and other bombs, in the high-altitude Qinghai-Tibet Plateau.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X