For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆதரித்தோம்- மன்மோகன் சிங்

Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காகவே அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா. அதேசமயம், நாங்கள் இலங்கையின் இறையாண்மையில் தலையிட மாட்டோம், அதற்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த பிரதமர்,

ஒவ்வொருவரும் சாதக, பாதகங்களை எடைபோட்டு பார்ப்பது அவசியம். இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒட்டியே நாங்கள் செயல்பட்டுள்ளோம்.

இலங்கையின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க நாங்கள் விரும்பவில்லை. அதே சமயத்தில், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நீதி

கிடைப்பதற்கும், அவர்கள் கவுரவமான வாழ்க்கை நடத்துவதற்கும் நமது அக்கறை வெளிப்படுத்தப்பட வேண்டும். அதற்காகவே தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட்டோம் என்று பிரதமர் கூறினார்.

English summary
Prime Minister Manmohan Singh said India's vote against Sri Lanka at the UNHRC was in line with its stand and wanted to ensure that concern was expressed to enable minority Tamils in that country to get justice. Singh also said India did not want to "infringe" on the sovereignty of Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X